கோலிய தப்பா நினைக்காதீங்க.. உண்மையா அங்க நடந்த கதையே வேற.. மறைக்காம காரணத்த சொல்றேன்.. 19 வயது ஆஸ்திரேலிய வீரர் பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான பாரடர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 311 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்திருக்கிறது.

- Advertisement -

முன்னதாக இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய சாம் கொன்ஸ்டாஸ் மிகச் சிறப்பாக விளையாடி தனது முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அபாரமான அரை சதத்தை பதிவு செய்தார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய கொன்ஸ்டாஸ், பும்ரா வீசிய 11வது ஓவரில் 18 ரன்கள் எடுத்தார். இது ஒரு ஓவரில் பும்ரா விட்டுக் கொடுத்த அதிகபட்ச டெஸ்ட் ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கொன்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா இருவரும் இணைந்து ஆஸ்திரேலியா அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். எனினும் இறுதிக்கட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகள் கைப்பற்றியதால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் இழந்திருந்தது. இந்நிலையில் முதல் நாள் ஆட்டத்தின் 10வது ஓவரில் நடைபெற்ற சம்பவம் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசு பொருளானது.

- Advertisement -

விராட் கோலி மற்றும் 19 வயது ஆஸ்திரேலியா வீரர் சாம் கொன்ஸ்டாஸ் இடையே ஏற்பட்ட மோதல் கிரிக்கெட் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அனுபவ வீரர் மற்றும் கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டாரான விராட் கோலி இளம் வீரரிடம் நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. கிரிக்கெட் உலகின் நட்சத்திர வீரரான விராட் கோலி இளம் வீரரிடம் அப்படி நடந்திருக்க கூடாது என பலரும் கருத்து தெரிவித்தனர்.

மேலும் ஆக்ரோசமாக கிரிக்கெட் விளையாடுவதற்கும் ஒரு எல்லை உண்டு என முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இந்நிலையில் போட்டிக்குப் பின் பேசிய ஆஸ்திரேலியா அணியின் இளம் ஓபனிங் பேட்ஸ்மேன் சாம் கொன்ஸ்டாஸ், விராட் கோலியின் மீது எந்த தவறும் இல்லை என தெரிவித்திருக்கிறார். மேலும் போட்டியின் போது இது போன்று நடப்பது சகஜம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

முதல் நாள் ஆட்ட நேர முடிவுருக்குப் பிறகு பேசிய அவர், “துவக்க டெஸ்ட் போட்டியிலேயே அரை சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சியானது. 20 அல்லது 30 வருடங்களுக்கு முன்பு பந்தை தடுத்தாடுவது பழக்கமாக இருந்தது. ஆனால் தற்காலத்தில் அதிரடியாக தாக்கி விளையாடுவது தான் ஸ்டைலாக இருக்கிறது. நானும் அதையே பின்பற்றினேன்” எனக் கூறினார். தான் விளையாடிய அனைத்து ஷாட்களையும் நன்கு பயிற்சி செய்ததால் அவற்றை விளையாடுவதற்கு எந்த தயக்கமும் இல்லை என தெரிவித்தார்.

மேலும் விராட் கோலியுடனான மோதல் குறித்து பேசிய அவர், விராட் கோலியின் மீது எந்த தவறும் இல்லை என தெரிவித்திருக்கிறார். கிரிக்கெட் போட்டிகளில் இதுபோன்று நடப்பது சகஜமான ஒன்று. அந்த நேரத்தில் வீரர்களிடம் இருக்கும் உணர்வினால் சில நேரங்களில் விவாதம் அல்லது வாக்குவாதம் செய்வது போலாகிவிடுகிறது. அது தவிர்க்க முடியாத ஒன்று எனக் கூறினார். விராட் கோலி வேண்டுமென்றே தன் மீது மோதவில்லை எனவும் தெரிவித்தார்.

நானும் கிளவுஸ் சரி செய்து கொண்டிருந்ததால் அவரை கவனிக்கவில்லை. அந்த நேரத்தில் போட்டியிருந்த சூழ்நிலை மற்றும் அப்போதிருந்த உணர்ச்சி பெருக்கினால் இருவரும் காரசாரமாக வாக்குவாதம் செய்து கொண்டோம். மற்றபடி விராட் கோலியின் மீது எந்த தவறும் இல்லை என தெரிவித்திருக்கிறார். ஆட்டத்தின் 10வது ஓவரின் போது ஆஸ்திரேலியா அணியின் இளம் வீரர் மீது விராட் கோலி மோதினார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு வீரரான உஸ்மான் கவாஜா தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆடுகளத்தில் இருந்த அம்பையரும் விராட் கோலி மற்றும் சாம் கொன்ஸ்டாஸ் ஆகியோரிடையே பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சமாதானப்படுத்தினர். எனினும் முதல் நாள் ஆட்ட நேர முடிவிற்குப் பிறகு போட்டி நடுவரின் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விராட் கோலிக்கு டெஸ்ட் போட்டி சம்பளத்தில் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles