டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா தேர்வுக்கு பிசிசிஐ கொடுத்த அழுத்தமே காரணம் என்றும், அவரது தேர்வு ரோகித் சர்மாவுக்கு மகிழ்ச்சி இல்லை என்பதால் அவர் டி20 கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு பெற போவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவருக்கும் இடையேயான பிரச்சனை இந்த ஐபிஎல் சீசன் தொடக்கத்தில் இருந்தே நடைபெற்று வந்தது. மும்பை அணியின் கேப்டனாக இருந்து ரோகித் சர்மாவை மும்பை அணி நிர்வாகம் அவரை கேப்டன் பதவியில் இருந்து விலக்கி குஜராத் அணிக்கு கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவை வாங்கி கேப்டனாக நியமித்தது.
மேலும் மும்பை அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்த்திக் பாண்டியாவின் கேப்டன்சி செயல்பாடு அணி வீரர்களுக்கு திருப்திகரமாக அமையவில்லை. மேலும் இந்த சீசனில் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விளையாடாததால் பெரும் போட்டிகளில் தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றில் இருந்து முதல் அணியாக வெளியேறியும் விட்டது.
இந்தத் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி செயல்பாடுகளும் மேலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்திலும் ஃபார்ம் அவுட் ஆகி இருந்த சூழ்நிலையில் டி20 உலக கோப்பையில் இவரது பெயர் இடம் பெறாது என்றும் ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்றும் அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஹர்திக் பாண்டியாவின் பெயர் இடம் பெற்றதோடு மட்டுமில்லாமல் அவரையே துணை கேப்டனாகவும் பிசிசிஐ நியமித்தது.
பிசிசிஐ அவரை வருங்கால கேப்டனாக பார்ப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ஹர்த்திக் பாண்டியாவின் தேர்வு ரோகித் சர்மாவுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றும் இதனால் அவர் கூடிய விரைவில் டி20 உலக கோப்பையோடு குறுகிய கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறப் போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலக கோப்பையில் அணி தேர்வுக்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ரோஹித் சர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூட்டணி ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக நியமித்தது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த அஜித் அகர்கர் “ஹர்திக் பாண்டியா தற்போது பார்மில் இருந்தால் அவரைவிட சிறந்த ஆல்ரவுண்டரை நீங்கள் பார்க்க முடியாது. எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரை துணை கேப்டனாக நியமித்தோம்” என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க:விராட் கோலி தான் விளையாடுகிறாரோ? என்று சந்தேகம் வந்தது.. அந்த ஒரு ஷாட் பிரமித்து விட்டேன்.. பட்டிதார் குறித்து பிரட்லீ
இந்த முடிவில் ரோகித் சர்மாவுக்கு மகிழ்ச்சி இல்லை என்று கூறப்படுகிறது. இந்த டி20 உலக கோப்பைக்கு பின்னர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய சீனியர் வீரர்கள் வெளியேறும் நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய வீரர்களைக் கொண்ட புதிய அணி கட்டமைக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

