இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில் சீனியர் வீரர்கள் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு பிசிசிஐ தரப்பிலிருந்து ஒரு முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் தோல்வியை சந்தித்தது பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. மேலும் இந்திய வீரர்கள் அனைவரும் உள்நாட்டு தொடரில் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டெல்லி, மும்பை அணிகளுக்காக விளையாடினார்கள்.
இருப்பினும் அந்தத் தொடரில் இவர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை முடித்த பிறகு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது. தொடர் தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி இந்த கோப்பையை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் தேர்வு குழு தரப்பில் இருந்து ரோஹித் சர்மாவிற்கு முக்கிய தகவல் அனுப்பப்பட்டிருப்பதாக பிசிசிஐ பெயரை வெளியிடாத அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “கடந்த முறை தேர்வு குழு கூட்டத்தின் போது அதன் அதிகாரிகள் ரோஹித் சர்மா உடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியானது. எனவே சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்தவுடன் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேசப்படும். இந்திய அணி நிர்வாகம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை தொடர்களுக்கு என தனி தனி திட்டங்கள் வைத்திருக்கிறது. இதற்காக சில பெரிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இன்னொரு நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை. குறிப்பாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு சதம் அடித்தார். எனவே டெஸ்ட் தொடரில் அவருக்கு மேலும் சில வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல வெள்ளை பந்து கிரிக்கெட் பொருத்தவரை அவர் மீது தற்போது எந்த புகாரும் இல்லை. மேலும் ஒரு நாள் கிரிக்கெட் பொருத்தவரை அவரது பேட்டிங் ஃபார்ம் எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

