சிக்கலில் ஆஸ்திரேலியா.. கடைசி நேரத்தில் கேப்டன் கம்மின்ஸ் & ஹேசில்வுட் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகல்.. புதிய கேப்டனுக்கான போட்டியில் 2 வீரர்கள் !

பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் 2025ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி துவங்குகிறது. அனைத்து அணிகளும் அவர்களது வீரர்கள் குழுவை ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள். தொடர் துவங்கும் முன்பு ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய அடி கிடைத்துள்ளது.

- Advertisement -

பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய வீரர்கள் இத்தொடரில் விளையாட இருந்தார்கள். கடந்த 4 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு பல்வேறு பட்டங்களை பெருமைகளைப் பெற்றுத் தந்த கேப்டன் கம்மின்ஸ், கடைசி நேரத்தில் காயத்தால் அணியில் இருந்து விலகுவதாக செய்திகள் வந்துள்ளன.

- Advertisement -

கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயத்தால் கம்மின்ஸ், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க மாட்டார் என ஆஸ்திரேலியா பத்திரிக்கையாளர்கள் செய்திகள் வெளியிட்டுள்ளனர். மேலும் ஐ.பி.எல் தொடரில் அவர் பங்கேற்பதும் சந்தேகமே. இதனால ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் மாற்று கேப்டனை தேர்வு செய்யும் பணியில் பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து வருகிறது.

- Advertisement -

இதற்க்கு முன்பு ஆஸ்திரேலியாவை வழி நடத்திய ஸ்டீவன் ஸ்மித் அல்லது துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் இருவரில் ஓர் நபர் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட உள்ளனர். ஆஸ்திரேலியாவின் காயப் பட்டியல் கம்மின்ஸோடு முடியவில்லை. பார்டர் கவாஸ்கர் டிராபியில் காயமடைந்த ஜாஸ் ஹேசில்வுட் இன்னும் குணமாகததால் அவரும் விலகவுள்ளார்.

அடுத்ததாக காயத்தால் விலகும் மூன்றாவது வீரர், மிட்செல் மார்ஷ். சாம்பியன்ஸ் டிராபி மட்டுமல்லாமல் ஐ.பி.எல் தொடரிலும் அவர் விலகுகிறார். ஆஸ்திரேலியாவின் மூன்று முக்கிய வீரர்கள் இப்படி காயத்தால் வெளியேறியது அணிக்கு பெரிய பின்னடைவு. உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட புதிய திறமையான இளம் வீரர்கள் அணியில் சேர்க்கபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மிட்செல் மார்ஷ்க்கு பதிலாக தேர்வு செய்யப்பட வேண்டிய மாற்று வீரர் பற்றி ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ” அண்மையில் நடந்த பிக் பேஷ் லீகை பார்த்தவர்களுக்கு மிட்ச் ஓவன் பற்றி நன்று அறியும். ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்காக ஒப்பனராக ஆடிய ஓவன் இந்த ஆண்டு மிகச் சிறப்பாக ஆடியுள்ளார். இறுதிப் போட்டியில் பி.பி.எலின் அதிவேக சதம் விளாசி பெயரைப் பதித்துள்ளார். “

” அவரை தேர்வுக் குழுவினர் நிராகரித்தால் மிகப் பெரிய ஆச்சர்யம். மார்ஷ் இல்லாத பட்சத்தில் ஓவன் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்யலாம். மேலும் பந்துவீச்சிலும் பங்களிப்பார். அதனால் மிட்செல் மார்ஷுக்கு சரியான மாற்று வீரர் ஓவன் மட்டுமே. உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் டஸ்மேனியா அணிக்காக அவர் துவக்க வீரராக ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ” என்றார் ரிக்கி பாண்டிங்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles