மீண்டும் தொடங்கும் ஐபிஎல்.. 3 மைதானங்களை தேர்வு செய்துள்ள பிசிசிஐ.. கொண்டாட்டத்தில் ஆர்சிபி ரசிகர்கள்

18-வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் திருவிழா இந்தியாவில் வெகு சிறப்பாக நடைபெற்ற வந்த நிலையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பதட்டம் காரணமாக 58 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மீதமுள்ள போட்டிகள் கைவிடப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் மீண்டும் போட்டிகள் ஆனது ஒரு வாரத்திற்குள் தொடங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் சீசன் திருவிழாவில் இதுவரை 58 போட்டிகள் நடைபெற்ற நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பஞ்சாபில் உள்ள தரம்சலாவில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி பாதியில் நிறுத்தப்பட்டு ரசிகர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மைதானத்தில் போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டியானது நிறுத்தப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பதட்டம் காரணமாகவே போட்டியானது நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் முதலில் போட்டிகளானது இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு நடைபெறும் என்று தகவல் வெளிவந்தது. ஆனால் வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் அவர்களது நாட்டு போட்டிகளில் பிஸியாகி விடுவதால் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் உருவாகும். இந்த சூழ்நிலையில் விரைவாக போட்டிகளை நடத்த திட்டமிட்டு பிசிசிஐ இன்னும் ஒரே வாரத்தில் மீண்டும் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அதாவது போட்டிகளை தென்னிந்தியாவில் உள்ள சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களில் மீதமுள்ள 14 போட்டிகளையும் வைத்து நடத்தி முடிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நாளிலும் இரண்டு போட்டிகளில் வைக்கவும் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க:டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விராட் கோலி தேவை.. ராயுடு முதல் பிரையன் லாரா வரை.. பாவம் ரோகித் சர்மா ரசிகர்கள்!

இது குறிப்பாக ஆர்சிபி ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. ஏனென்றால் 17 வருடங்களாக ஐபிஎல் கோப்பையை வெல்லாமல் இருக்கும் வலுவான அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த முறை ஒரு அணியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எனவே இந்த முறை பெங்களூர் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் இந்த முறை பெங்களூர் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles