டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விராட் கோலி தேவை.. ராயுடு முதல் பிரையன் லாரா வரை.. பாவம் ரோகித் சர்மா ரசிகர்கள்!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியது. இதுதொடர்பாக பிசிசிஐ நிர்வாகிகளுடன் விராட் கோலி ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் விராட் கோலியை இந்திய அணியில் இருந்து விடுவதற்கு பயிற்சியாளர் கம்பீர் உட்பட யாருக்கும் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தேர்வு செய்வதற்கு முன்பாக விராட் கோலியுடன் பிசிசிஐ நிர்வாகிகள் சந்திக்க உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த நிலையில், தற்போது விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலக இருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

பிரையன் லாரா கோரிக்கை

இந்த சூழலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா விராட் கோலிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் பிரையன் லாரா தரப்பில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விராட் கோலி தேவைப்படுகிறார். நிச்சயமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட விராட் கோலி சம்மதிப்பார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதில்லை.

- Advertisement -

இனி அவரின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் பேட்டிங் சராசரி குறைந்தபட்சம் 60ஆக இருக்க போகிறது என்று தெரிவித்துள்ளார். அதேபோல் அம்பத்தி ராயுடு தரப்பில், தயவு செய்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறக் கூடாது. இந்த நேரத்தில் இந்திய அணிக்கு மிக முக்கியமான வீரராக இருக்கிறீர்கள். உங்களிடம் இன்னும் ஏராளமான கிரிக்கெட் இருக்கிறது.

புலம்பும் ரோகித் ரசிகர்கள்

நீங்கள் இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் அதே போன்று இருக்காது. அதனால் ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். விராட் கோலியின் ஓய்வு வதந்திக்கே பல்வேறு ஜாம்பவான் வீரர்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி வருகின்றனர். ஆனால் 3 நாட்களுக்கு முன்பாக தான் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

- Advertisement -

அவரின் ஓய்வு முடிவுக்கு அனைவரும் வாழ்த்து மட்டுமே கூறினர். ரோகித் சர்மா ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று யாருமே கோரவில்லை. இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் விராட் கோலியையும் அதிகமாக வசைபாட தொடங்கி உள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles