இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கேவின் ரவிச்சந்திரன் அஸ்வின் இனி சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகள் குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேச மாட்டார்கள் என்று ஆச்சரியமான தகவலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று போட்டிகளில் தொடர்ச்சியான தோல்வியை சந்தித்து மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அணித்தேர்வு முதல் தற்போது பிளேயிங் லெவன் வரை குழப்பமான நிறைய விஷயங்கள் சிஎஸ்கே அணியை சூழ்ந்து கொண்டிருக்கிறது. 4 போட்டியில் விளையாடியிருந்தாலும் அதிக வீரர்கள் சென்னை அணியில் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் 9.75 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது விளையாடி வருகிறார். இந்த சூழ்நிலையில் அவரது யூடியூப் சேனலில் போட்டிகள் முடிந்தவுடன் அதனை பகுப்பாய்வு செய்வதற்கு மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறார். அதில் அனலிஸ்ட் பீடாக் பிரசன்னா சிஎஸ்கேவில் பத்திரானாவை பிளேயிங் லெவலில் விளையாட வைக்க கூடாது எனவும், நூர் அகமதுவை ஏலத்திலேயே வாங்கி இருக்கக் கூடாது எனவும் கேப்டன் ருத்ராஜ் மூன்றாவது வரிசையில் களமிறங்க கூடாது எனவும் கூறி இருக்கிறார்.
அது குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். மேலும் அந்த சேனலில் சிஎஸ்கே ஸ்கவுட்டங் டீமில் இருக்கும் வித்யூத் திறமையான இளம் வீரர்களின் பெயர்களை எழுதிக் கொடுத்ததாகவும், ஆனால் அதனை வாங்க சிஎஸ்கே நிர்வாகம் மறுத்து விட்டதாகவும் கூறி இருக்கிறார். இந்த கருத்துக்கள் தற்போது சர்ச்சையாகி வரும் நிலையில் சிஎஸ்கே விளையாடும் போட்டிகள் குறித்து அதன் பகுப்பாய்வு குறித்து தன் சேனலில் இனி பேச மாட்டார்கள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்திருக்கிறார்.
இது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிஎஸ்கே அணி குறித்த விஷயங்கள் மட்டும் பேசப்படாது எனவும், மற்ற அணிகள் குறித்த வீடியோக்கள் தொடர்ந்து வெளியிடப்படும் எனவும் கூறியிருக்கிறார். அதே சமயத்தில் ரசிகர்கள் மற்ற அணிகளை மட்டும் விமர்சிப்பீர்கள், ஆனால் சிஎஸ்கே அணியை விமர்சிக்க மாட்டீர்களா? என ரசிகர்கள் அஸ்வினின் கருத்துக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

