கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது .. ரோஹித் என்னைக் குறை சொல்லி இந்திய அணி விட்டு நீக்கிய போது டிப்ரஷனுக்கு போயிட்டேன்.. அப்புறம் இப்படி தான் மீண்டு வந்தேன் – சிராஜ் வெளிப்படைப் பேச்சு

இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய பந்து வீச்சாளராக இருப்பவர் முகமது சிராஜ். ஆனால் அண்மையில் இந்தியா வென்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவரிடம் குறை உள்ளதாக குறிப்பிட்டு அவரை ஒதுக்கினார் கேப்டன் ரோஹித் ஷர்மா. அது தன்னை பெரிய வருத்தத்தில் ஆழ்தியதாகவுகம், அதில் இருந்து தான் எவ்வாறு மீண்டு வந்ததார் என்பதைப் பற்றியும் சிராஜ் பேசியுள்ளார்.

- Advertisement -

புதிய பந்து மற்றும் பழைய பந்து இரண்டிலும் சிறப்பாக பந்துவீசக்கூடிய ஒரு பவுலரை அணி விரும்பியதாகவும், சிராஜின் பலம் புதிய பந்தில் மட்டுமே தெரிவதால், அவரை சாம்பியன்ஸ் டிராபி அணியில் சேர்க்க வேண்டாம் என கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியிருந்தார். ஒருநாள் போட்டிகளில் நல்ல பார்மில் இருந்த சிராஜுக்கும் ரசிகர்களுக்கும் இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மேலும் இது தன்னை மனதளவில் மிகவும் சோர்பாக்கியதாக சிராஜ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அவர் பேசியதாவது, ” முதலில் என்னால் அதனைச் சுத்தமாக ஜீரணிக்கவே முடியவில்லை. ஒரு கட்டத்தில், என்னுடைய கிரிக்கெட் இன்னும் முடியவில்லை என எனக்கு நானே தொடர்ந்து நம்பிக்கை ஊட்ட வேண்டிய நிலை வந்தது. சாம்பியன்ஸ் டிராபி எனக்கானது இல்லை எனவாயிற்று, அதற்கு என்ன செய்வது. இதனை விட பெரிதாக ஒன்று கிடைக்கும் என நினைத்துக் கொண்டு கிடைத்த இடைவெளியை பயனுள்ளதாக மாற்ற, தொடர்ந்து என்னை மேம்படுத்தும் பயிற்சியில் ஈடுபட்டேன். இப்போது என் உடல்த்குதி புத்துணர்ச்சியோடு இருப்பதை உணர்கிறேன், எனது பவுலிங்கையும் மிகவும் விரும்புகிறேன். ” என்றார் முஹம்மத் சிராஜ்.

- Advertisement -

தற்போது ஐபிஎல் 2025 சீசனில் தனது அபாரமான ஆட்டத்தால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்காக அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்டநாயகன் விருதைப் வென்றது, அவரது திறமைக்கு முத்திரை பதித்திருக்கிறது. இந்த சீசனில் அவர் புதிய உத்சாகத்துடனும், மன உறுதியுடனும் களமிறங்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles