தோனிக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எங்கு விளையாடினாலும் மரியாதை கிடைக்கும்.. வெற்றிக்குப் பின்னர் ரஷீத் கான் பேட்டி

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இப்போட்டியில் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோல்வி அடையச் செய்தது.

- Advertisement -

வெற்றிக்குப் பின்னர் மகேந்திர சிங் தோனி காலத்தில் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று குஜராத் அணியின் ஸ்பின்னர் ரஷீத் கான் கூறியிருக்கிறார். நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 231 ரன்கள் குவித்தது

- Advertisement -

குஜராத் அணியின் கேப்டன் கில் 55 பந்துகளில் 104 ரன்களும் மற்றோரு தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் 51 பந்துகளில் 103 ரன்களும் குவித்தனர். இவர்கள் இருவரையும் 17 ஓவர்கள் வரை சென்னை அணியின் பந்துவீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இதனால் இறுதியில் குஜராத் அணி 231 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் இந்த மெகா இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடிய போது தொடக்கத்திலேயே மூன்று முக்கிய விக்கெட்டைகளை பறிகொடுத்ததால் அந்த அணியால் இறுதியில் 196 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இந்த தோல்வியிலும் கடைசியாக களமிறங்கிய மகேந்திர சிங் தோனி 11 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 26 ரன்கள் குவித்து ரசிகர்களை சற்று ஆறுதல் படுத்தினார்.

குஜராத் அணியின் வெற்றிக்குப் பின்னர் ரசித் கான் கூறும் பொழுது
“எங்கள் அணியில் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் பேட்டிங் செய்வது ரசித்துப் பார்க்கும் வகையில் அமைந்தது. இருவருமே மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். எனக்கு தொடக்கத்தில் முதுகு வலி பிரச்சனை இருந்ததால் என்னால் சரியாக பந்து வீச முடியவில்லை. இப்போது அந்த பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருகிறது.

- Advertisement -

நான் மகேந்திர சிங் தோனிக்கு நிறைய முறை பந்து வீசி இருக்கிறேன். அவர் எப்போது மைதானத்திற்குள் வந்தாலும் அவருக்கு கொடுக்கப்படும் மரியாதை வேறு மாதிரி இருக்கும். ரசிகர்கள் அவர் மீது அதிகப்படியான அன்பினை வைத்திருக்கிறார்கள். இது உலகில் எங்கு சென்று விளையாடினாலும் அவருக்கு இதேபோன்று மரியாதைதான் கிடைக்கும்.

இதையும் படிங்க:3 மேட்ச் அவருக்கு சரியா போகலனாலும் நாங்க நம்பிக்கை இழக்கல.. 2 வருஷமா அவர் எங்களுக்கு நிறைய செஞ்சிருக்காரு.. வெற்றிக்குப் பின்னர் கில் பேட்டி

அவர் விளையாடும் காலத்தில் நானும் விளையாடிக் கொண்டிருக்கிறேன், மேலும் அவருக்கு பந்து வீசுகிறேன் என்பதெல்லாம் எனக்கு கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி” என்று கூறி இருக்கிறார். மகேந்திர சிங் தோனியை பற்றி வீரர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் வல்லுனர்களே புகழ்ந்து பேசி வரும் நிலையில், தற்போது ரசித் கானும் பேசி இருப்பது ரசிகர்களுடைய உற்சாகத்தை அதிகரித்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles