கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல்லில் களம் இறங்கிய இரண்டு அணிகளான லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளில் அதிக கவனத்தைப் பெற்ற குஜராத் அணியில் கடந்த சீசனில் விளையாடிய நட்சத்திர இந்திய வீரர் இல்லாதது எங்கள் அணிக்கு சற்று பின்னடைவாக உள்ளது என்று ரஷித் கான் கூறி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரைப் பொருத்தவரை 16 வருடங்கள் ஆகியும் இன்னமும் முதல் கோப்பையை கைப்பற்றாமல் சில அணிகள் இருக்கும் நிலையில், அறிமுகமான முதல் சீசனிலேயே சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. 2022ஆம் ஆண்டு மும்பையில் இருந்து விலகி ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியின் கேப்டனாக அறிவித்தது.
இத்தனைக்கும் அந்த அணியில் கில், ஹர்திக் பாண்டியா, ரஷித் கான், முகமது சமி போன்றோரை தவிர பெரிய நட்சத்திர வீரர்கள் என்று யாரும் இல்லை. சென்னை, மும்பை, ராஜஸ்தான் போன்ற வலுவான அணிகளுக்கு மத்தியில் களம் இறங்கி அதிக போட்டிகளில் வெற்றி பெற்று அனைவரது ஆச்சரியத்தையும் ஈர்த்தது.
குஜராத் அணியின் வெற்றிக்கு காரணமாக ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியும் மேலும் பயிற்சியாளர் ஆன நெக்ராவின் வழிகாட்டுதலும், அணி வீரர்களுக்கு இடையேயான ஒற்றுமையும் பெரிய பலமாக பார்க்கப்பட்டது. முதல் சீசனில் கோப்பையை வென்ற அணி இரண்டாவது சீசனில் இறுதிப்போட்டி வரை வந்து அசத்தியது. இந்த நிலையில் குஜராத் அணியில் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு கேப்டனாக மாற்றம் செய்யப்பட்டார்.
மேலும் கடந்த சீசனில் வேகப்பந்து வீச்சில் முக்கிய தூணாக விளங்கிய முகமது சமியும் உலக கோப்பையில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் முகமது சமி இல்லாதது பந்துவீச்சில் சற்று கடினமாக உள்ளது என்று கூறி இருக்கிறார். மேலும் இது குறித்து அவர் கூறும் பொழுது
” இந்த சீசனில் முகமது சமியை அதிகம் மிஸ் செய்கிறோம். ஏனென்றால் அவர் கடந்த இரண்டு சீசன்களிலும் பந்துவீச்சில் முக்கிய ரோலை செய்தார்.
புதிய பந்து, பழைய பந்து என எதுவாக இருப்பினும் அணிக்கு என்ன தேவையோ அதனை கனக்கசிதமாக செய்து முடித்தார். அது எனக்கு மட்டும் இல்லாமல் மற்ற பௌலர்களுக்கும் பணியை எளிதாக்கியது. இந்த சீசனையும் நாங்கள் நேர்மறையாக தான் தொடங்கி இருக்கிறோம். ஒவ்வொரு வீரரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். சில முடிவுகள் எங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் அணி வீரர்கள் ஒற்றுமையாகவே சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:அந்த 2 சிக்ஸர்கள்தான் ஆட்டத்திற்கு உயிர் கொடுத்தது.. பட்லர் 7 வருஷமா இததான் பண்றாரு.. வெற்றிக்கு பின்னர் சஞ்சு சம்சன் பேட்டி
முகமது சமி இல்லாதது குறித்து கூறிய ரஷித் கான், ஹர்திக் பாண்டியாவை மிஸ் செய்யாதது குறித்து எதுவும் கூறவில்லை. இது தற்போது கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.

