அந்த 2 சிக்ஸர்கள்தான் ஆட்டத்திற்கு உயிர் கொடுத்தது.. பட்லர் 7 வருஷமா இததான் பண்றாரு.. வெற்றிக்கு பின்னர் சஞ்சு சம்சன் பேட்டி

17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் திரில்லர் வெற்றி பெற்ற பின் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அணியின் வெற்றி குறித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளத்தில் வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை நொறுக்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுனில் நரேன் இந்த போட்டியில் மிக அற்புதமாக விளையாடி சதம் விலாசினார்.

- Advertisement -

வெறும் 56 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 13 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என 109 ரன்களை விளாசினார். மிகவும் கைதேர்ந்த பேட்ஸ்மேன் போல் அவர் விளையாடிய ஷாட்கள் அற்புதமாக இருந்தது. இதனால் இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 223 ரன்கள் குவித்தது. இந்த மெகா இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ்பட்லர் ஒரு முனையில் அதிரடியாக வெடித்துக் கொண்டிருந்தார்.

- Advertisement -

இறுதியில் அவரோடு முக்கியமான கட்டத்தில் களமிறங்கிய ரோமன் போவல் சுனில் நரைனின் ஓவரில் இரண்டு அபாரமான சிக்சர்களை வெளிப்படுத்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். தோல்வி உறுதி என்ற நிலையில் விளையாடிக் கொண்டிருந்த ராஜஸ்தான் அணிக்கு அந்த இரண்டு சிக்சர்கள் ஆட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்தது. மறுமுனையில் அபாரமாக விளையாடிய ஜாஸ் பட்லர் 60 பந்துகளில் 107 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

இதில் ஒன்பது பவுண்டரிகளும், ஆறு சிக்சர்களும் அடங்கும். இந்த திரில்லர் வெற்றி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறும்பொழுது
“இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. விக்கெட்டுகளை இழந்து நாங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பொழுது முக்கியமான நேரத்தில் ரோமன் போவல் களமிறங்கி விளாசிய அந்த இரண்டு சிக்ஸர்கள், எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது.

- Advertisement -

இந்த வேடிக்கையான போட்டியில் அதிர்ஷ்டமும் எங்களுக்கு கை கொடுக்க, எங்களால் அற்புதமாக மீண்டு வர முடிந்தது. இது ஒரு அற்புதமான விளையாட்டு. கொல்கத்தா அணியும் மிகவும் நன்றாக விளையாடினார்கள். இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. சுனில் நரேன் மற்றும் வரும் சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள். இந்த ஆடுகளம் அவர்களுக்கு நன்றாக உதவியது. இரண்டு சிக்சர்களை அடித்தால் ஆட்டத்திற்குள் மீண்டும் செல்லலாம் என்று நினைத்தபோது ரோமன் போவல் களமிறங்கி அற்புதமாக விளையாடினார்.

இதையும் படிங்க:சங்கக்கரா கூறிய வார்த்தைகள் எனக்கு நம்பிக்கையை கொடுத்தது.. வெற்றிக்கு பின்னர் ஜாஸ் பட்லர் பேட்டி

ஜாஸ் பட்லர் கடந்த 6,7 வருடங்களாக சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் இந்த ஆட்டத்தை இப்படியே எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு தொடக்க ஆட்டக்காரராக பட்லர் களத்திற்குள் நுழைந்தால் அவர் இருபதாவது ஓவர் வரை இருப்பார் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். இருபதாவது ஓவர் வரை அவர் பேட்டிங் செய்தால் சேஸ் செய்யப்பட முடியாத இலக்கு என்று எதுவுமே கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles