வலைப்பயிற்சியில் எல்லோரும் சென்ற பிறகு நான் இதை செய்வேன்.. அதுவே இன்று எனக்கு உதவியது.. ஆட்டநாயகன் விருது பெற்ற ஹெட் மயர் பேட்டி

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றபின் கடைசி கட்டத்தில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஹெட் மையர் சில சுவாரசியமான கருத்துக்களை பகிர்ந்து உள்ளார்.

- Advertisement -

பஞ்சாபில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 147 ரன்கள் குவித்தது. ஜித்தேஷ் சர்மா 29 ரன்களும், அசுட்டொஸ் சர்மா 31 ரன்களும், லிவிங்ஸ்டன் 21 ரன்களும் குவித்தனர். ஆடுகளம் மெதுவாக இருந்ததால் பஞ்சாப் அணியால் சுலபமாக ரன்கள் குவிக்க முடியவில்லை.

- Advertisement -

இதை அடுத்து இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. இந்த அணியும் அதிரடியாக விளையாடாமல் மெதுவாகவே ரன்களைக் குவித்து வந்தது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தனுஷ் கோட்டியான் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் 39 ரன்களும், இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஹெட் மயர் 10 பந்துகளில் 27 ரன்களும் குவித்தார். இதில் மூன்று சிக்சர்களும் அடங்கும். இதனால் இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்தது.

வெற்றிக்குப் பின்னர் ஆட்டநாயகன் விருது பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஹெட் மையர் கூறும்பொழுது
“இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி பினிஷிங் செய்வது எல்லாம் பயிற்சியின் மூலம் வருவதுதான். வலை பயிற்சியில் நான் சரியாக இருக்க விரும்புகிறேன். சிக்ஸர் அடிக்கும் பயிற்சியில் எல்லோரும் சென்ற பிறகும் நான் வலை பயிற்சி மேற்கொள்வேன். ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை வாய்ந்திருப்பது எனக்கு ஒரு வகையில் வரமாகவும், அதே நேரத்தில் சாபமாகவும் அமைகிறது.

- Advertisement -

அது ஒரு நேரத்தில் நமக்கு சரியாக கைகொடுக்கும். ஒரு நேரத்தில் கை கொடுக்காது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தோல்வி பற்றிய எண்ணங்கள் வரத்தான் செய்யும். ஆனால் நான் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன். கடைசி நேரத்தில் முதல் சில பந்துகளுக்கு பிறகு போல்ட் வந்து என்னை அமைதிப்படுத்தினார். கடைசி இரண்டு பந்துகளுக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நான் சிங்கிள் கிடைத்தாலும் எடுக்கும் சூழ்நிலையில் இருந்தேன்.

இதையும் படிங்க:வருஷா வருஷம் இவங்களோட இதே கூத்துதான்.. வெற்றிக்குப் பின்னர் பேசிய சஞ்சு சாம்சன்

நான் போல்டிடமும் இதே கூறி ஆட்டத்தை எப்படியாவது டையாவது செய்து விட வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் எனக்கு ஒரு புல்டாஸ் பந்து கிடைக்க ஆட்டத்தை வெற்றிகரமாக என்னால் முடிக்க முடிந்தது. இரண்டு மாத காலம் வீட்டை விட்டு வந்து விளையாடுகிறோம். அதனால் நம்மை நாம் எவ்வளவு தூரம் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறோமோ அதுதான் முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles