நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
பஞ்சாப் பணியின் சொந்த மைதானமான முள்ளன்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆடுகளம் மெதுவாக இருந்ததால் பஞ்சாப் அணியால் சுலபமாக ரன்கள் குவிக்க முடியவில்லை. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணி தொடக்கத்தில் 52 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷாம் கரண் 24 பந்துகளில் 31 ரன்களும், அசிடோஸ் சர்மா 16 பந்துகளில் 31 ரன்களும் குவித்தனர். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் ஆவேஷ் கான் இரண்டு விக்கெட்டுகளும் கேசவ் மகாராஜ் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. கடந்த சில போட்டிகளாக பார்ம் இன்றி தவித்து வந்த ஜெய்ஸ்வால் 28 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார். அதன் பிறகு இறுதிக் கட்டத்தில் ஹெட் மயர் 10 பந்துகளில் 27 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடைபெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீசிக்கொண்டிருக்கும்போது ஆவேஸ் கான் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கேட்ச் பிடிக்க சென்றபோது, நடுவில் குல்தீப்சன் வந்து பிடித்தார். பின்னர் இறுதிக்கட்டத்தில் ஆவேஸ் கான் பந்துவீச்சில் சஞ்சு சாம்சன் கேட்ச் பிடிக்க முயன்ற போது, ஆவேஸ் தானே வந்து தடுத்து அந்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார்.
இதுகுறித்து வெற்றி கேப்டன் சஞ்சு சாம்சன் நகைச்சுவையாக கூறும் பொழுது
“இது போன்ற உயரமான கேட்ச்களை பிடிப்பதில் இந்த ஆண்டு மட்டுமல்ல கடந்த ஆண்டும் நிறைய வேடிக்கையான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் என்ன ஒன்று எல்லாரும் கேட்ச் பிடிப்பதை பார்க்க ஆசைப்படுவது நன்றாக இருக்கிறது. மைதானம் முழுக்க சத்தமாக இருப்பதால் யார் கேட்ச் பிடிக்க வருகிறார்கள் என்று தெரிவதில்லை. என் கையில் கிளவுஸ் இருப்பதால் உயரமாக வரும் கேட்ச்களை பிடிக்க எனக்கு வசதியாக இருக்கும் என்று எனது பந்துவீச்சாளர்களுக்கு நான் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க:பங்காளி மேட்ச்.. மும்பை எதிரா சிஎஸ்கேவின் உத்தேச அட்டகாசமான பிளையிங் XI.. அதிரடி மாற்றம்.. மீண்டும் அசுர பலம்
இலக்கை துரத்தி விளையாடும் பொழுது நாங்கள் சிறிது பதட்டமாகவே இருந்தோம். பஞ்சாப் அணியுடன் ஆன போட்டி எப்போதுமே நெருக்கமாகவே செல்கிறது. பஞ்சாப் அணியினர் இன்று நன்றாக பந்து வீசினார்கள். ஹெட் மையர் சிறப்பாக விளையாடி போட்டியை முடித்தார். இவரும், ரோமன் பவலும் அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தார்கள். தனுஷ் கோட்டியானுக்கு ரஞ்சி சீசன் நன்றாக அமைந்ததால் எங்களின் பேட்டிங் வரிசையை சீர்குலைக்காமல் அவரை ஓபனிங் அனுப்பி விட்டோம். ஜெய்ஸ்வால் இன்று நன்றாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

