இந்த 2 பசங்க இந்தியாக்காகவும் சிறப்பா ஆடுவாங்க.. பும்ராவுக்கு அடுத்ததா இவர்தான் பெஸ்ட்.. தோல்விக்கு பின்னர் சஞ்சு சாம்சன் பேட்டி

ஐபிஎல் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் ராஜஸ்தான் சன்ரைசர்ஸ் அணியிடம் 36 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.

- Advertisement -

சன்ரைசர்ஸ் அணி நிர்ணயித்த 176 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தடுமாறி விளையாடிய ராஜஸ்தான் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சாம்சன் தோல்விக்கான முக்கிய காரணங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி முன்னணி பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டமிருந்து வெளியேறினாலும், தொடக்க ஆட்டக்காரரான ஹெட் இந்த முறை நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தார். ஹெட் 34 ரன்களும் ராகுல் திருப்பாதி 37 ரன்களும், கிளாசன் 34 பந்துகளில் 50 ரன்கள் குவித்தனர். ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் சென்னை ஆடுகளத்தை நன்றாக பயன்படுத்தி அபாரமாக பந்து வீசினார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் ஆன ஆவேஸ் கான் நான்கு ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவருக்குப் பிறகு போல்ட் நான்கு ஓர்களில் 45 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை அள்ளினார். அதற்குப் பிறகு விளையாடிய ராஜஸ்தான் அணியினரால் சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியவில்லை.

அதிகபட்சமாக ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 42 ரன்களும், ஜூரேல் 56 ரன்கள் குவித்தனர். கேப்டன் சாம்சன் 11 பந்துகளை எதிர் கொண்டு 10 ரன்கள் மட்டுமே குவித்து வெளியேறினார். இந்தப் போட்டிக்குப் பிறகு ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் தோல்விக்கான முக்கிய காரணங்களை கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் அபாரமாக பந்து வீசினார்கள்.

- Advertisement -

இந்தப் போட்டியில் பனியின் தாக்கம் எப்போது வரும் என்பதை யூகிக்க முடியவில்லை. எங்களது வலது கை பேட்ஸ்மன்களுக்கு அவர்களின் இடது கை பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினார்கள். இந்த இடத்தில் அவர்கள் எங்களை விட நன்றாக வேலை செய்து இருக்கிறார்கள். ரியான் பராக் மற்றும் ஜூூரேல் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மட்டுமின்றி இந்திய அணிக்காகவும் சிறப்பாக பங்களிப்பை வழங்க கூடிய வீரர்கள்.

இதையும் படிங்க:இவங்க 3 பேரால எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. பயிற்சியாளரின் ஒரு முடிவு போட்டியை மாற்றியது.. வெற்றிக்குப் பின்னர் பேட் கம்மின்ஸ் பேட்டி

பந்து வீச்சில் எக்கானமியில் பும்ராவுக்கு அடுத்த இடத்தில் சந்திப் சர்மா இருக்கிறார். அவர் ராஜஸ்தான் அணிக்கு ஏலத்தின் மூலம் வர முடியாவிட்டாலும் அதற்குப் பின்னர் வந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இரண்டு நல்ல அணிகள் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. கடந்த 15, 16 வருடங்கள் இல்லாமல் ஒரு சிறந்த இரண்டு அணிகள் ஐபிஎல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்கின்றன” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles