ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேஞ்சஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி அடுத்த எலிமினேட்டர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து நம்பிக்கையை ஏற்படுத்தி வந்த பெங்களூர் அணி பரிதாபமாக இந்த போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது. வெற்றி பெறும் முனைப்பில் பெங்களூர் அணி எந்த வித மாற்றமும் இல்லாமல் இந்தப் போட்டியில் களமிறங்கியது.
முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்கள் முடிவில் முன்னணி பேட்ஸ்மேன்களின் சீரான ரன்கள் உதவியுடன் எட்டு விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. தொடக்க ஜோடி இம்முறை நான்கு ஓவர்களில் 37 ரன்களில் வெளியேறினாலும், அதற்குப் பின்னர் களமிறங்கிய கிரீன் 27 ரன்களும் பட்டிதார் 34 ரன்கள் குவிக்க, ஓரளவு சவாலான ஸ்கோரை பெங்களூர் அணி எட்டியது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் இந்த முறை அஸ்வினின் முதல் பந்திலையே டக் அவுட் ஆகி வெளியேறினார். ராஜஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஆவேஷ் கான் மற்றும் அஸ்வின், ஆவேஷ் கான் மூன்று விக்கட்டுகளும், அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள். இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது.
முந்தைய போட்டியில் தான் செய்த தவறுகளை அனைத்தையும் திருத்திக் கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணி இம்முறை தொடக்காட்டக்காரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 45 ரன்கள் குவித்தார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியில் நான்கு ஓவர்கள் பந்துவீசி வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அஸ்வின் ஆட்டநாயகன் விருத்தினை வென்றார். இவரது பந்து வீச்சில் முக்கியமாக கிரீன் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் ஆட்டம் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தனது அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை ராஜஸ்தான் அணி எதிர்கொள்ள உள்ளது.
இதையும் படிங்க:சிஎஸ்கே ரத்தம்னா சும்மாவா.. முக்கிய ஆட்டத்தில் அஸ்வின் அபார பந்துவீச்சு.. 173 ரன்கள் இலக்கை நிர்ணயித்த ஆர்சிபி
கிட்டத்தட்ட 16 வருடங்களாக கோப்பையை கைப்பற்ற முடியாமல் தவித்து வரும் பெங்களூர் அணி இந்த முறை தொடக்கத்திலேயே பிளே ஆப் சுற்றை வெளியேற வேண்டிய நிலை வந்தாலும், அதற்குப் பிறகு தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று பலமான நம்பிக்கையை பெற்றது. இருப்பினும் எதிர்பாராத விதமாக இந்த போட்டியில் தோல்வி அடைந்ததால் தொடரை விட்டு வெளியேறவேண்டிய சோகம் உண்டாகி இருக்கிறது. ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற ஆர்சிபி ரசிகர்கள் அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

