சிஎஸ்கே ரத்தம்னா சும்மாவா.. முக்கிய ஆட்டத்தில் அஸ்வின் அபார பந்துவீச்சு.. 173 ரன்கள் இலக்கை நிர்ணயித்த ஆர்சிபி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையேயான முக்கிய எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்கை நிர்ணயித்திருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

- Advertisement -

இந்த போட்டியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக வந்து வீசி இக்கட்டான சூழ்நிலையில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தை ராஜஸ்தான் பக்கம் திருப்பினார்.

- Advertisement -

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இரண்டாவது பாதியில் பணியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சேஸ் செய்ய வசதியாக இருக்கும் என தேர்வு செய்ததாக கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியிருக்கிறார். இதன்படி பெங்களூர் அணியின் இன்னிங்சை விராட் கோலி மற்றும் டு பிளஸ்சிஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

- Advertisement -

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த ராஜஸ்தான் அணி இந்த முறை தனது தவறுகளை திருத்திக் கொண்டு பெங்களூர் அணிக்கு எதிராக அபாரமாக பந்து வீசியது ஆர்சிபி நான்கு ஓவர்களில் 37 ரன்கள் எடுத்திருந்த போது தனது முதல் விக்கெட்டை பறி கொடுத்தது. டு பிளசிஸ் 17 ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து விராட் கோலி சாகலின் பந்துவீச்சில் ஸ்லாக் ஸ்வீப் ஆட முயற்சித்து வெளியேறினார்.

இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த கேமரூன் கிரீன் மற்றும் பட்டிதார் கூட்டணி மூன்றாவது விக்கெட்டுக்கு 41 ரன்கள் குவித்த நிலையில் இந்த கூட்டணியை அஸ்வின் பிரித்தார். கிரீன் 27 ரன்களில் ரோமன் போவலிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, அதற்குப் பிறகு வந்த மேக்ஸ்வெல் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஸ்ட்ரைட் ஆட முயற்சித்து அஸ்வினின் பந்துவீச்சில் ஜூரேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இதற்குப் பின்னர் பெங்களூர் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வெளியேற, லோமரோர் மட்டும் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். இதன் மூலம் பெங்களூர் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்து இருக்கிறது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் 4 ஓவர்கள் பந்து வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

இதையும் படிங்க:மன அழுத்தத்தில் இருந்து விடுபட நான் இதைத்தான் செய்வேன்.. அது எனக்கு நல்ல பலனை தரும்.. மகேந்திர சிங் தோனி பேட்டி

லீக் சுற்றில் பெங்களூர் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ரவிச்சந்திரன் அஸ்வினின் முன்னாள் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிய நிலையில் இவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல, ஒரு கட்டத்தில் பெங்களூர் அணியிடம் செல்ல இருந்த ஆட்டத்தை இறுக்கிப்பிடித்து ராஜஸ்தான் பக்கம் கொண்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் சிஎஸ்கே ரசிகர்கள் அஸ்வின் முன்னர் சென்னை அணியில் விளையாடியதை நினைவு கூர்ந்து சிஎஸ்கே ரத்தம்னா சும்மாவா? என்பது போன்ற கமெண்ட்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles