மெக்கர்க் சிறப்பாக விளையாடினார்.. ஆனா எங்க முக்கிய பௌலர்ஸ்க்கு எதிரா போட்டியை மாத்துனது இவர்தான்.. தோல்விக்கு பின்னர் சஞ்சு சாம்சன் பேட்டி

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தோற்கடித்தது. தோல்விக்கான காரணம் குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியிருக்கிறார்.

- Advertisement -

அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பிரேசர் மெக்கர்க் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள் என 50 ரன்கள் குவித்தார். பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பொரேல் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள் என 65 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

அதற்குப் பின்னர் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்டெப்ஸ் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள் என 41 ரன்கள் குவிக்க, டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணித்தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றம் அளித்தனர் ஜெய்ஸ்வால் நான்கு ரன்களிலும், பட்லர் 19 ரன்களிலும் வெளியேற, அதற்குப் பிறகு அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தனி ஒரு மனிதராக போராடினார். அவர் 46 பந்துகளில் 8 பவுண்டரிகள் ஆறு சிக்ஸர்கள் என 86 ரன்கள் குவித்து அணியின் இக்கட்டான சூழ்நிலையில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். அதன் பிறகு மற்ற பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்து வெளியேறியதால் ராஜஸ்தான் அணி எட்டு விக்கெட்டுகளுக்கு 201 ரன்கள் மட்டுமே குவித்தது.

இந்த தோல்விக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசும் பொழுது
“தொடக்கத்தில் போட்டி எங்கள் கைகளில்தான் இருந்தது. ஓவருக்கு 11 முதல் 12 ரன்கள் வரை தேவைப்பட்டபோது இது டி20 கிரிக்கெட்டில் எடுக்க கூடிய ரன்கள்தான். நாங்கள் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாட வில்லை. நாங்கள் கூடுதலாக ஒரு 10 ரன்கள் கொடுத்ததே எங்கள் தோல்வியின் முக்கிய காரணமாக அமைந்து விட்டது. டெல்லி அணியின் பிரேசர் சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

நாங்கள் இந்த தொடரில் மூன்று போட்டிகளில் தோற்று இருக்கிறோம். மூன்றுமே மிக நெருக்கமாக வந்து தோல்வி அடைந்த போட்டிகள். எனவே இனி வெற்றி பாதைக்கு திரும்புவது எங்களுக்கு மிகவும் அவசியம். இறுதிப் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய சந்திப் சர்மாவுக்கு எதிராக ஸ்டப்ஸ் மிகச் சிறப்பாக விளையாடினார். அவர் சந்திப் சர்மா மற்றும் சாகல் ஆகிய இருவருக்கு எதிராக அடித்த மூன்று சிக்சர்கள் ஆட்டத்தையே மாற்றி விட்டது. எல்லா பெருமையும் அவருக்கே சேரும்.

இதையும் படிங்க:ரோகித் சர்மாவுக்கு இங்கிலீஷ் வராது.. இதற்காக அவரை நாங்கள் கலாய்த்திருக்கிறோம்.. ஆரம்ப காலம் குறித்து மனம் திறக்கும் யுவராஜ் சிங்

எனவே தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து நாங்கள் திரும்பவும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டியது மிகவும் அவசியம்” என்று கூறி இருக்கிறார். 12 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணிக்கு இது ஆறாவது வெற்றியாக அமைந்திருக்கிறது. மேலும் புள்ளி பட்டியலில் தற்போது டெல்லி அணி ஆறாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணிக்கு இது மூன்றாவது தோல்வியாக அமைந்திருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles