புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? தனி ஆளாக கர்நாடகா அணியை காப்பாற்றிய ராகுல் டிராவிட் இளைய மகன் அன்வே.. அண்ணனை தூக்கி சாப்பிடுவார் போலயே!

இந்திய கிரிக்கெட் அணியின்
முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட் தற்போது ஓய்வு பெற்று குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார். எனினும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட ராகுல் டிராவிட் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

- Advertisement -

உலக கிரிக்கெட்டில் தனக்கென ஒரு பெயரை பெற்றுள்ள ராகுல் டிராவிட்டை  இந்திய ரசிகர்கள் இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என்று அழைப்பார்கள். இந்த நிலையில் புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்று சொல்வார்கள். ராகுல் டிராவிட் மாதிரி அவருடைய மூத்த மகன் சமித் டிராவிட்  அண்டர் 19 கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வளம் வருகிறார்.

- Advertisement -

எனினும் அடுத்த அண்டர் 19 உலக கோப்பை வரும்போது அவருக்கு 19 வயதை தாண்டி விடும் என்பதால் அவர் U19 இந்திய அணியில் இடம் பெறவில்லை. எனினும் டிராவிட் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக விளையாடி வருகிறார். இந்த சூழலில் தான் ராகுல் டிராவிட்டின் இளைய மகனான அன்வே டிராவிட் அபாரமாக கிரிக்கெட் விளையாடி வருவது தெரிய வந்துள்ளது.

- Advertisement -

கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தின் 19 வயது கிரிக்கெட்டில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது, அதிக ரன்கள் அடித்ததற்கான விருதை அன்வே டிராவிட் நேற்று முன்தினம் வாங்கி இருந்தார். இந்த நிலையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான விஜய் மெர்சண்ட் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் கர்நாடகா சார்பாக ராகுல் டிராவிட்டின் இளைய மகன் அன்வே டிராவிட் விளையாடுகிறார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கர்நாடகா அணி தடுமாறியது. அப்போது பேட்டிங் செய்ய வந்த அன்வே டிராவிட் 140 பந்துகளை எதிர் கொண்டு 90 ரன்கள் குவித்துள்ளார். இதில் 12 பவுண்டரிகள் அடங்கும்.

- Advertisement -

அன்வே டிராவிட் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 ரன்களில் அதனை மிஸ் செய்தார். அன்வே டிராவிட்டின் அபார ஆட்டத்தால் கர்நாடகா அணி 81.5 ஓவரில் 239 ரன்கள் எடுத்தது. இதன் எடுத்து ராஜஸ்தான் அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் களம் இறங்கியது. இதில் ராஜஸ்தான் வீரர்கள் தடுமாற அந்த அணி 53.5 ஓவரில் 123 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதை அடுத்து கர்நாடக அணி 116 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடுகிறது. தந்தை மற்றும் அண்ணனைப் போலவே அன்வே டிராவிட் இளம் வயதிலேயே அபாரமாக விளையாடி வருவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய் மெர்சண்ட் கோப்பையில் அன்வே டிராவிட் ஐந்து இன்னிங்ஸில் 357 ரன்கள் குவித்து இருக்கிறார். இதில் நான்கு அரை சதம் அடங்கும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles