ராகுல் டிராவிட் சார் எனக்கு டெஸ்ட் வைத்தார்.. இன்று அவர் பயிற்சி கொடுக்கும் அணிக்கு நான் கேப்டன்.. ஜாலியான சஞ்சு சாம்சன்

2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. இம்முறை மெகா ஏலத்திற்கு பின் சீசன் நடக்கவுள்ளதால், அனைத்து அணிகள் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதிய பயிற்சியாளர்கள், புதிய கேப்டன்கள் என்று அந்த அணிகள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்த சூழலில் ராஜஸ்தான் அணி சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இம்முறை 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசும் போது, சில நேரங்களில் வாழ்க்கை கொடுக்கும் சர்ப்ரைஸ் அதிசயமாக இருக்கும். ஏனென்றால் எனது ஐபிஎல் முதல் சீசனின் போது, ராகுல் டிராவிட் சார் தான் என்னை ட்ரையல்ஸ் செய்தார்.

- Advertisement -

பயிற்சியாளராக ராகுல் டிராவிட்

- Advertisement -

இளம் வீரராக இருந்த எனது பேட்டிங் பார்த்துவிட்டு என்னிடம் வந்து, ஓகே.. எனது அணியில் நீ விளையாடுகிறாயா? என்று கேட்டார். அந்த நாள் முதல் இப்போது வரை ஆச்சரியம் தான். இப்போது ராஜஸ்தான் அணிக்கு நான் கேப்டன். நீண்ட ஆண்டுகளுக்கு பின் ராகுல் டிராவிட் சார் பயிற்சியாளராக திரும்புகிறார். இந்த உணர்வு கொஞ்சம் ஸ்பெஷலாக இருக்கிறது. 

ஏனென்றால் அவர் எப்போதும் ராஜஸ்தான் அணியின் குடும்பத்தில் ஒருவராக இருந்துள்ளார். அவர் மீண்டும் எங்களுடன் கை கோர்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு கீழ் ராஜஸ்தான் அணியிலும் ஆடி இருக்கிறேன். பயிற்சியாளராக இருந்த போது இந்திய அணியிலும் ஆடி இருக்கிறேன். 

- Advertisement -

ராஜஸ்தான் அணி

ஆனால் இப்போது அவர் பயிற்சியாளராகவும், நான் கேப்டனாகவும் செயல்படுவது கூடுதல் ஸ்பெஷலாக உள்ளது. அவரிடம் இருந்து எண்ணற்ற விஷயங்களை கற்றுக் கொள்ள ஆவலாக இருக்கிறேன். கடைசி 3 ஆண்டுகள் ராஜஸ்தான் அணிக்கு சிறந்ததாக அமைந்தது. கன்சிஸ்டன்சியுடன் வெற்றி பெற்றோம். இம்முறை சில சுவாரஸ்யமான வீரர்களை வாங்கி இருக்கிறோம்.

13 வயது சிறுவன் முதல் 35 வயது சீனியர்கள் வரை ராஜஸ்தான் அணிகாக விளையாடவுள்ளனர். அவர்களுடன் இணைந்து நட்புடன் பழக காத்திருக்கிறேன். ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே எங்களின் பணிகள் தொடங்கிவிடுகிறது. தயாராகுவதற்கே 7 முதல் 10 நாட்கள் கட்டாயம் தேவை. இம்முறை சிறந்த பயணத்தை குழுவாக தொடங்குவதே மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles