150 கிமீ மயாங்க் யாதவின் அதிவேக பவுன்சை சமாளிக்க.. ஸ்ரேயாஸ் ஐயர் எடுத்த செம பிளான்.. நானே அசந்து போயிட்டேன் – கோச் ரிக்கி பாண்டிங் பேட்டி

நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் லக்னோ அணியின் அதிவேகப் பந்துவீச்சாளரான மயங்க் யாதவை எதிர்கொள்வது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் திட்டம் தீட்டியதாக கோச் ரிக்கி பாண்டிங் சில கருத்துக்கள் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக பிரப் சிம்ரன்சிங் 48 பந்துகளை எதிர்கொண்டு 91 ரன்கள் குவித்தார். இதில் குறிப்பாக 3வது வரிசையில் களம் இறங்க வேண்டிய ஸ்ரேயாஸ் ஐயர், நான்காவது இடத்தில் களம் இறங்கினார். அவருக்கு பதிலாக ஜோஸ் இங்கிலீஷ் மூன்றாவது இடத்தில் இறங்கினார்.

- Advertisement -

இதில் அதிவேக பந்துவீச்சாளர் ஆன மயாங்க் யாதவின் பந்துவீச்சில் தொடர்ச்சியாக ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசி முதல் ஓவரிலேயே 22 ரன்கள் குவித்தார். மேலும் 14 பந்துகளை எதிர் கொண்ட அவர் 30 ரன்னில் ஆட்டம் இழந்த நிலையில் அவரது அதிரடி பின்னால் வந்த பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவதற்கு உதவியது. அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி 199 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் ஜோஸ் இங்கிலீஷ் மூன்றாவது வரிசையில் களமிறங்கியதற்கான காரணம் குறித்து கோச் ரிக்கி பாண்டிங் சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஜோஸ் இங்கிலீஷ் இறங்குவது குறித்த முடிவை கேப்டன் எங்களிடம் எடுத்து வந்தார். இந்த ஆடுகளத்தில் ஆரம்பத்திலேயே விக்கட்டை இழந்தால் லக்னோ அணியின் பந்துவீச்சை சமாளிக்க ஜோஸ் இங்கிலீஷ் சரியான தேர்வாக இருப்பார் என கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கருதினார். இதில் குறிப்பாக மயாங்க் ஆரம்பத்திலேயே ஷார்ட் பிட்ச் பந்துகள் வீசுவார் என்று கருதினோம்.

- Advertisement -

இதையும் படிங்க:94 ரன்ல அவுட் ஆனேன்.. அப்போ மகிபாய் என்னை இந்த வார்த்தை சொல்லிதான் அழைத்தார்.. அது ஏன்னு எனக்கு தெரியல.? ஆயுஸ் மாத்ரெ பேட்டி

அதுபோன்ற பந்துகளை எதிர் கொண்டு விளையாடுவது ஜோஷ் இங்கிலீஷின் பலமாகும். அவர் அடித்த ஃபுல் ஷாட் அபாரமானதாக இருந்தது” என ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக பஞ்சாப் அணி 7 போட்டிகள் வெற்றி பெற்று தற்போது புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மேலும் அடுத்த சுற்று செல்வதற்கான வாய்ப்பை கிட்டத்தட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி உறுதி செய்து விட்டது என்றே கூறலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles