நேற்று முன்தினம் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் சென்னை அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்ற ஆயுஸ் மாத்ரெயை எம்எஸ் தோனி பாராட்டிய விதம் குறித்து 17 வயது சிறுவன் சில வார்த்தைகள் பேசி இருக்கிறார்.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. அந்த அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக விராட் கோலி 33 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு இறுதி கட்டத்தில் ரொமாரியோ ஷெப்பர்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் ஷேக் ரசீது 14 ரன்னில் ஆட்டம் இழந்தாலும், மற்றொரு இளம் தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரெ தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை மிக கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார். 48 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 9 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் என 94 ரன்கள் குவித்து விளையாடிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்து வெளியேறினார்.
அதற்குப் பின்னர் விக்கெட்டுகள் கைவசம் இருந்த போதும் பெங்களூர் அணியின் துல்லியமான பந்துவீச்சால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 211 அரண்கள் குறித்து 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் தொடக்க வீரர் ஆயுஸ் மாத்ரெ 94 ரன்கள் குவித்ததன் மூலமாக மிகப் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளார். அதிலும் குறிப்பாக ஐபிஎல் தொடரின் சிறப்பான பந்துவீச்சாளராக புவனேஸ்வர் குமாரின் ஒரே ஓவரில் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக அடித்தது அவரை திறமையான ஒரு பேட்ஸ்மேனாக காட்டி இருக்கிறது.
இதையும் படிங்க:பிரீத்தி ஜிந்தாவின் 11 ஆண்டு கனவு.. முதல் சீசனிலேயே சாதித்த ஸ்ரேயாஸ் ஐயர் – ரிக்கி பாண்டிங் கூட்டணி
இந்த சூழ்நிலையில் போட்டி முடிந்ததும் மாத்ரெ எம்எஸ் தோனி தன்னை அழைத்ததாக கூறினார். அப்போது தோனி அவரிடம் “மகி பாய் என்னை சாம்பியன் என்று அழைத்தார். ஆனால் அவர் ஏன் என்னை அப்படி அழைத்தார் என்று தெரியவில்லை” என்று கூறினார். இந்த இளம் வயதில் அருமையான பேட்டிங் டெக்னிக் வைத்திருக்கும் காரணத்தால் தோனி இவரை அப்படி அழைத்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

