பிரீத்தி ஜிந்தாவின் 11 ஆண்டு கனவு.. முதல் சீசனிலேயே சாதித்த ஸ்ரேயாஸ் ஐயர் – ரிக்கி பாண்டிங் கூட்டணி

ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை வெல்லாத சில அணிகளில் பஞ்சாப் அணியும் ஒன்றாகும். இதில் கோப்பையை வெல்லாத அணிகளாக இருந்தாலும் ஆர்சிபி மற்றும் டெல்லி உள்ளிட்ட அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்காவது தகுதி பெற்று வந்தன. 2022ல் அறிமுகமான லக்னோ அணி கூட தொடர்ச்சியாக 2 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றன.

- Advertisement -

அதேபோல் டெல்லி, ஆர்சிபி, லக்னோ உள்ளிட்ட அணிகளுக்கு சரியான கேப்டன், பயிற்சியாளர் மற்றும் நட்சத்திர வீரர்கள் என்று அனைத்தும் சரியாக அமைந்தது. ஆனால் பஞ்சாப் அணிக்கு சரியான கேப்டன், சரியான பயிற்சியாளர், சரியான வீரர்கள் என்று யாரும் அமையவில்லை. இதனால் அந்த அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவும் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களை தொடர்ந்து மாற்றி வந்தார்.

- Advertisement -

ஜோக்கரான பஞ்சாப் அணி

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களை மாற்றியது பஞ்சாப் கிங்ஸ் அணிதான். அதுமட்டுமல்லாமல் 2014ஆம் ஆண்டுக்கு பின் பஞ்சாப் அணி ஒருமுறை கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது இல்லை. இதனால் பஞ்சாப் அணி ஒரு ராசியே இல்லாத அணியாக பலரும் கிண்டல் செய்து வந்தனர். ஆனாலும் பிரீத்தி ஜிந்தா ஒவ்வொரு போட்டியிலும் முன் நின்று ஆதரவு அளித்து வந்தார்.

- Advertisement -

இந்த சூழலில் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக பிரீத்தி ஜிந்தா, பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கை நியமனம் செய்ததோடு, அவருக்கு முழு சுதந்திரமும் வழங்கினார். ரிக்கி பாண்டிங்கின் தலையீடு காரணமாக அவர் அர்ஷ்தீப் சிங்கை கூட பஞ்சாப் அணியில் இருந்து விடுவிக்க நேர்ந்தது. ஆனாலும் ரிக்கி பாண்டிங்கை முழுமையாக நம்பி மெகா ஏலத்தில் பங்கேற்றார்.

ரிக்கி பாண்டிங் எடுத்த முடிவு

ரிக்கி பாண்டிங் நிச்சயம் பஞ்சாப் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட்-ஐ கொண்டு வருவார் என்று பார்த்தனர். ஆனால் ரிக்கி பாண்டிங் கோப்பைகளை வென்ற கேப்டன் என்பதை மறந்துவிட்டனர். நட்சத்திர வீரர்களை விடவும் கோப்பையை வெல்லக் கூடிய கேப்டனை தான் ரிக்கி பாண்டிங் தேடினார். அதற்கேற்ப டெல்லி அணியின் பழைய கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடி கொடுத்து வாங்கினார்.

- Advertisement -

அவரை சுற்றி விளையாடுவதற்கு அர்ஷ்தீப் சிங், சாஹல், இங்கிலிஸ், மார்கோ யான்சன், ஒமர்சாய், ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் என்று அனுபவ வீரர்களை வாங்கினார். அதேபோல் பிரப்சிம்ரன் சிங் மற்றும் சஷாங்க் சிங்கை ரீடெய்ன் செய்ததோடு, உள்ளூர் வீரர்களான பிரியன்ஷ் ஆர்யா , நேஹல் வதேரா, ஹர்ப்ரீத் ப்ரார் போன்றவர்களையும் வாங்கினார்.

அவர்களை ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக வழிநடத்த, பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவின் 11 ஆண்டு கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றில் ஒரு காலினை எடுத்து வைத்துள்ளது. இன்னும் 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வென்றாலே எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் இனி பஞ்சாப் அணியின் அடையாளமாக ஸ்ரேயாஸ் ஐயர் – ரிக்கி பாண்டிங் கூட்டணி இருக்கும். 

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles