சாதித்து காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர் .. நம்பர் 1 இடத்தில் பஞ்சாப் அணி.. கட்டிபிடித்து பாராட்டிய பிரீத்தி ஜிந்தா.. மும்பைக்கு சோகம்

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 39 பந்துகளில் 57 ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

இதன்பின் பஞ்சாப் அணி தரப்பில் பிரப்சிம்ரன் சிங் – பிரியன்ஷ் ஆர்யா இணை தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விளாசிய நிலையில், தீபக் சஹர் வீசிய 2வது ஓவர் மெய்டனாகியது. ஆனால் அவரின் 4வது ஓவரிலேயே 6, 4, 4 என்று 16 ரன்களை விளாசினர். ஆனால் பும்ரா வீசிய அடுத்த ஓவரிலேயே பிரப்சிம்ரன் சிங் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

பிரியன்ஷ் – இங்லிஸ் கூட்டணி

தொடர்ந்து பிரியன்ஷ் ஆர்யா – ஜாஷ் இங்லிஸ் இணைந்து அதிரடியை தொடர்ந்தது. 6 ஓவர்கள் வரை நிதானமாக ஆடிய இருவரும், 7வது ஓவர் முதல் அதிரடியில் விளாசி தள்ளினர். ஒவ்வொரு ஓவரிலும் முதல் பந்திலும் பவுண்டரி அல்லது சிக்சரை விளாசியதால், மும்பை அணி பவுலர்கள் மீது அழுத்தம் இருந்து கொண்டே இருந்தது.

- Advertisement -

இதனால் 10 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 89 ரன்களை குவித்தது. அப்போது அஸ்வனி குவார் வீசிய 11வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரியை விளாசி இங்லிஸ் அசத்த, அவர் 29 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். அதேபோல் அதிரடியாக ரன்களை குவித்த பிரியன்ஷ் ஆர்யா 27 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் மும்பை அணி பும்ராவை அட்டாக்கில் கொண்டு வந்தது.

ஸ்ரேயாஸ் அதிரடி

ஆனால் பஞ்சாப் அவரை எளிதாக கையாண்டு விக்கெட்டை காப்பாற்றியது. ஆனால் சான்ட்னர் பவுலிங்கில் பிரியன்ஷ் ஆர்யா சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் 35 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது பஞ்சாப் அணி 30 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.

- Advertisement -

அப்போது ஸ்ரேயாஸ் – இங்லிஸ் இணைந்து அதிரடியாக விளையாட, திடீரென இங்லிஸ் 73 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஸ்ரேயாஸ் – வதேரா இணை சேர்ந்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தது. போல்ட் பவுலிங்கில் சிக்ஸ் விளாசி ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டத்தை முடித்தார். இதன் மூலமாக புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் அணி முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதனால் மும்பை அணி 4வது இடத்தில் நிறைவு செய்திருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles