நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்படும் பேட் கம்மின்ஸ் தன்னுடைய பேவரைட் பிளேயர் வைபவ் சூர்யவன்சி எனக் கூறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூரியவன்சி அதிரடியாக 36 பந்துகளில் சதம் அடித்தார். மேலும் 12 சிக்ஸர்கள் அடித்து நொறுக்கி இருந்தார்.
இதுகுறித்து பேட் கம்மின்ஸ் பேசும்போது “தற்போது வைபவ் சூர்யவன்சிதான் எனக்கு பிடித்த வீரர் என்று நான் நினைக்கிறேன். அவர் பந்தை மிகவும் அபாரமான வேகத்தில் அடிக்கிறார். அதைப் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது”
“இந்தப் பையனுக்கு நீங்கள் பந்தை துல்லியமாக வீச வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு பெரிய பின்னடைவை உருவாக்கி விடுவார். அவருடைய பேட் வேகம் மிகவும் அபாரமாக உள்ளது. அவர் தனது தொழில் வாழ்க்கையை சிறப்பாக தொடங்கியுள்ளார். அவர் ஆட்டத்தை தன் வசப்படுத்துகிறார். அவர் விளையாடும் விதம் எனக்கு பிடித்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

