வருகிற நவம்பர் மாதம் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி கிரிக்கெட் தொடர் அதிக முக்கியத்துவம் பெற்ற தொடராக கருதப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் இந்திய அணிக்கு சவால் விடும் வகையில் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை முன்னணி அணிகளாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் திகழ்ந்து வருகின்றன. கிரிக்கெட்டில் அதிக ஐசிசி கோப்பைகளை பெற்றுள்ள அணியாக ஆஸ்திரேலிய கருதப்படும் நிலையில், அதிக வல்லமை கொண்ட சக்தியாக இந்திய அணி விளங்குகிறது. மேலும் சமீபத்தில் டி20 உலக கோப்பையை கைப்பற்றி சாம்பியன் அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் நவம்பர் மாதத்தில் இருந்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆஸ்திரேலியா அணியோடு விளையாடுகிறது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியவில் தொடரை கைப்பற்றி அசத்தியது. மேலும் 2021ஆம் ஆண்டு ரகானே தலைமையில் ஆன இந்திய அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
ஆனால் இந்த முறை ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறி இருக்கிறார். இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. அந்த இரண்டு தொடர்களிலும் ஆஸ்திரேலியா அணியால் வெல்ல முடியவில்லை. நீண்ட காலமாக இந்த சோகம் இருந்து வரும் நிலையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் நிலையில் காலம் கனிந்து வந்துள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான முறையில் வெற்றி வெற்றிகளை குவித்திருக்கிறது என்று தெரியும். அதே வேளையில் ஆஸ்திரேலிய அணியும் இந்தியாவுக்கு எதிராக பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பொதுவான இடத்தில் நடைபெற்ற போது அதில் ஆஸ்திரேலியா கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இதையும் படிங்க:தப்பா நினைக்காதீங்க.. தொடர்ந்து தோனி மீது என் அப்பா வன்மத்தை காட்டுவது இதனால்தான் – யுவராஜ் சிங் விளக்கம்
இரண்டு அணிகளுமே வலுவான அணிகளாக திகழ்வதால், இந்தப் போட்டித் தொடர் நிச்சயம் கடும் சவாலாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இரண்டு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு சரிசமமாக இருக்கும் நிலையில் இதில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறுகிறார்.

