சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி இருக்கிறது. மும்பை அணியின் தோல்விக்கு பிறகு அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தோல்விக்கான காரணம் குறித்து கூறியிருக்கிறார்.
மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் 40 பந்துகளில் 69 ரன்களும், சிவம் டுபே 38 பந்துகளில் 66 ரன்களும், இறுதிக்கட்டத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய மகேந்திர சிங் தோனி நான்கு பந்துகளில் 20 ரன்களும் குவித்தனர்.
அதற்குப் பின்னர் 20 ஓவர்களில் 207 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கம் நன்றாகவே அமைந்தது. முதல் ஏழு ஓவர்களில் 10 ரன்கள் என 70 ரன்கள் குவித்து சிறப்பான தொடக்கம் அமைத்தது. இதற்கு பிறகு ரோகித் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து 60 ரன்களை குவித்தார்கள்.
இருப்பினும் இறுதிக்கட்டத்தில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சினால் மும்பை அணியால் 20 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. சென்னை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஆன பத்திரானா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அவரின் இந்த நான்கு விக்கட்டுகளால் தான் ஆட்டத்தின் முக்கிய திருப்புனையாகஅமைந்தது. இதற்குப் பின்னர் தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மகேந்திர சிங் தோனி சென்னை அணிக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்குகிறார் என்றும் கூறியிருக்கிறார். இது குறித்த அவர் கூறும் பொழுது
“இது நாங்கள் சேஸ் செய்யக்கூடிய இலக்குதான். சென்னை அணியினர் நன்றாக பந்து வீசினார்கள். இந்த போட்டியில் பத்திரானா தனது திட்டத்தில் தெளிவாக இருந்தார். அற்புதமாக பந்துகளை வீசினார்.
ஸ்டம்ப்களுக்கு பின்னால் நின்று கொண்டு தோனி சிறந்த ஆலோசனைகளை வழங்கினார். இது அவர்களுக்கு பெரிய அளவில் உதவி செய்தது. ஆடுகளத்தில் முதலில் பந்து நன்றாக நின்று வந்தது. பத்திரனா இந்த போட்டியில் முதல் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றும் வரை நாங்கள் ஆட்டத்தின் முன்னணியில் இருந்தோம்.
இதையும் படிங்க:தோனி அடிச்ச ஹாட்ரிக் சிக்ஸர்கள்தான்.. இந்தப் போட்டிக்குப் பெரிய வித்தியாசம்.. வெற்றிக்குப் பின் ருத்ராஜ் பேட்டி
நாங்கள் அந்த இடத்தில் இருந்து வேறு ஏதாவது யோசித்து சிறப்பாக முன்னேறி இருக்க வேண்டும். சிவம் தூபே சுழற் பந்துவீச்சாளர்கள் விட வேகப்பந்து பேச்சாளர்கள் சற்று கடினமாக இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் இன்று எங்களுக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை. இனி அடுத்து வரும் நான்கு, ஐந்து போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வேண்டியது அவசியம்” என்று கூறியிருக்கிறார்.

