பழைய மாதிரி இல்ல.. இந்த தடவை இந்தியாவுக்கு எதிரா பக்காவா ஸ்கெட்ச் போட்டுட்டு இருக்கோம்.. அதிலும் அவருக்கு.. பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம்பேட்டி

ஐசிசி 2024ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்தத் தொடரில் நடைபெற இருக்கிற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பங்காளி மோதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களிடையே மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணிக்கு தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் பாபர் ஆஸம் இந்திய அணிக்கு எதிராகவும் மேலும் முக்கிய வீரர் ஒருவருக்கு எதிராகவும் திட்டம் தீட்டி இருப்பதாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

கிரிக்கெட்டை பொருத்தவரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றால் உலக ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கும். கடைசி 2023ஆம் ஆண்டு இந்திய அணி ஐசிசி டி20 உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை என இரண்டு முறை பாகிஸ்தான் அணியை அந்த ஆண்டு வீழ்த்தியிருந்தது.

- Advertisement -

இதில் விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். இதில் 2012, 2016 வருடங்களைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டிலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றிருக்கிறார். அதிலும் ஆஸ்திரேலியாவில் கடைசியாக நடைபெற்ற 2022ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் விராட் கோலியின் மாஸ்டர் கிளாஸ் ஆட்டம் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். இக்கட்டான சூழ்நிலையில் அப்போட்டியில் அபாரமாக விளையாடிய விராட் கோலி 82 ரன்கள் குவித்து அற்புதமான ஃபினிஷிங் கொடுத்திருப்பார்.

இந்த நிலையில் வருகிற ஜூன் மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவது குறித்து இந்திய அணிக்கு எதிராகவும் விராட் கோலிக்கு எதிராகவும் முக்கிய திட்டம் தீட்டி இருப்பதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் பொழுது
“ஒரு அணியாக நீங்கள் எப்போதும் அவர்களின் பலத்தை வைத்து திட்டங்களை வகுப்பீர்கள். இதில் நாங்கள் எப்போதுமே ஒரு வீரருக்கு மட்டும் எதிராக திட்டம் வகுப்பதில்லை. எதிரணியின் 11 வீரர்களுக்கும் திட்டங்களை தீட்டுவோம். இந்த முறை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நியூயார்க்கில் நடைபெறுவதால் நியூயார்க்கின் சூழ்நிலைகள் குறித்து எங்களுக்கு தெரியாது. எனவே அந்த சூழ்நிலைகளை நன்கு அறிந்து விட்டு அதற்கு பின்னர் திட்டங்களை வகுக்க வேண்டும்.

இதையும் படிங்க:திடுக்கிடும் தகவல்.. டி20 உலகக் கோப்பைக்கு தீவிரவாத அச்சுறுத்தல்.. இந்திய வீரர்களை குறி வைத்துதான் இந்த சதியா.? கலக்கத்தில் பிசிசிஐ

விராட் கோலி சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். எனவே அவருக்கு எதிராக திட்டம் தீட்டுவது மட்டும் இல்லாமல் இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் எதிராகவும் திட்டங்களை வைத்துள்ளோம். மேலும் இந்த முறை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் எங்களுடன் இருக்கிறார். அவர் ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்காக வேலை செய்யத் துவங்கி விட்டார்” என்று கூறியிருக்கிறார். இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி வருகிற ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நியூயார்க்கில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles