ஐசிசி டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடர் வருகிற ஜூன் மாதம் அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தற்போது இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இது முடிந்த உடன் மே மாத இறுதியில் இந்திய அணி டி20 உலக கோப்பையில் பங்கு பெற அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறது. இந்தியா தவிர மற்ற நாடுகளும் மே மாத இறுதியில் இந்த இரண்டு நாடுகளுக்கும் சென்றடையும்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரானது வெஸ்ட் இண்டீஸில் ஆறு மைதானங்களிலும், அமெரிக்காவில் மூன்று மைதானத்திலும் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்ல் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
டிரிடினாட் மற்றும் டொபாகோ ஆகிய ஆகிய பகுதிகளில் போட்டி நடைபெறும் இடங்களில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வளம் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் டிரிடினாட் மற்றும் டொபாகோ நாட்டின் பிரதமர் கெத் ரோவ்லி பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
இது குறித்து தற்போது ஐசிசி மற்றும் டிரிடினாட் அரசு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் போட்டி நடைபெறுவதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்திருப்பதாகவும், தீவிரவாத அச்சுறுத்தலையொட்டி பல மடங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டிரிடினாட் பிரதமர் ரௌலி “துரதிர்ஷ்டவசமாக 21ஆம் நூற்றாண்டில் தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.
எங்கள் பகுதியில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளை நடத்துவதில் சில அமைப்புகள் விரும்பவில்லை. எனவே இதில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். போட்டிகளை நடத்துவதில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரம் செய்து வருகிறோம். இந்த அச்சுறுத்தலின் காரணமாக ஒவ்வொரு பகுதியிலும் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறோம்.
இதற்காக மற்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சூப்பர் 6 சுற்றில் விளையாடுகிறது. இந்த நிலையில் இந்திய வீரர்களை குறி வைத்து தான் தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் இது பிசிசிஐயை தற்போது கலக்கமடைய வைத்துள்ளது.

