வீடியோ.. பேட்டிங் மட்டுமில்ல.. பாஸ்ட் பவுலிங்லும் கலக்கும் டிராவிட் மகன்.. கூடிய சீக்கிரம் இந்திய அணியில் இடம் கிடைத்திடும் போல.!

மும்பையில் தற்போது கூச் பெஹர் ட்ராபிக்கான இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த இறுதிப் போட்டியில் மும்பை மற்றும் கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் கர்நாடகா அணி சார்பில் இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மகன் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் விளையாட்டில் மிகச் சிறந்த பேட்டராக கருதப்படுகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது தடுப்பாட்டத்தின் அபார திறமையை கண்டு ‘தி வால்’ என்ற நற்பெயரும் அவருக்கு உண்டு. புகழின் உச்சியில் இருக்கும் டிராவிட் இதுவரை 164 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 344 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் ஐபிஎல்இல் பெங்களூரு அணிக்காக விளையாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

2012ல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வர்ணனையாளராகவும் வேலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இந்திய அண்டர் 19 அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்று இந்திய அணி பட்டத்தினை வென்று தர உதவினார். அதற்குப் பிறகு தற்போது 2021ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

தற்போது இவரது மகன் சமித் டிராவிட் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். 18 வயது ஆல் ரவுண்டரான இவர் கூச் பெஹர் டிராபி இறுதிப் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை முதல் இன்னிங்ஸில் கைப்பற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் கர்நாடக அணிக்காக 19 ஓவர்கள் வீசி மிக முக்கிய இரண்டு விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

மும்பை அணியின் ஆயுஸ் சச்சின் வர்தக்கை 73 ரன்களில் ஆட்டம் இழக்கச் செய்தார். மற்றும் விக்கெட் கீப்பர் பிரதிக் யாதவை 30 ரன்களில் ஆட்டமிழக்க செய்துள்ளார். இதனால் மும்பை அணி தனது முதல் இன்னிங்சில் 380 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. தற்போது கர்நாடகா அணி பேட்டிங் செய்யும் வேலையில் ஆல் ரவுண்டரான சமித் 6வது வரிசையில் களமிறங்குகிறார். தற்போது இவரது பேட்ங்கைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

- Advertisement -

இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி தொடங்கும் வேளையில் ஜியோ சினிமாவிற்கு பேட்டியளித்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மகன் சமித்துக்கும் பயிற்சியாளராக இருப்பாரா? என்று கேட்கப்பட்டது. அதற்கு டிராவிட் பதிலளிக்கும் விதமாக
” நான் எனது மகன் சமித்திற்கு தந்தையாகவும், பயிற்சியாளராகவும் பணியாற்றுவது மிகவும் கடினம். எனவே ஒரு தந்தையாக இருப்பதிலேயே நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் தந்தையாக எனது மகனுக்கு என்ன செய்தேன் என்று தெரியவில்லை” என சிரித்தவாறு கூறினார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles