டி20 உலகக் கோப்பையில் புதிய ஸ்டாப் க்ளாக் ரூல்.. பீதியில் அணிகள்.. விதி என்ன சொல்கிறது?. முழு விபரம்

கிரிக்கெட் என்பது நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே வருகிற ஒரு விளையாட்டு. தற்போதைய நவீன கிரிக்கெட்டைப் பொருத்தவரை அதன் விதிகளும் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன. இதில் சுவாரசியம் என்னவெனில் மாற்றப்பட்ட விதிகள் அனைத்தும் ரசிகர்களை ஈர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

- Advertisement -

பல்வேறு வகையான விளையாட்டுகள் இருந்தாலும், கிரிக்கெட் என்பது இந்திய ரசிகனின் அடையாளமாகவே மாறிவிட்டது. சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை தேர்ந்தெடுக்கப்படுகிற முதல் தேர்வு கிரிக்கெட்தான். இதனாலேயே கிரிக்கெட் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப சுவாரசியமாகி கொண்டே வருகிறது.

- Advertisement -

கடந்த ஐபிஎல் சீசனில் கிரிக்கெட் விளையாட்டை இன்னமும் மக்களுக்கு சுவாரசியப்படுத்த இம்பாக்ட் பிளேயர் என்னும் விதி அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த விதியின் தன்மையினால் ஒரு அணி டாஸ் போடப்பட்ட பிறகு, அதற்குத் தகுந்தது போல பிளேயிங் லெவனை அறிவித்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அதேபோல பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருக்கும் வீரர்களுக்கு, முக்கியமான நேரத்தில் பேட்டிங் கிடைக்கவும், அணியின் சூழ்நிலைக்கு ஏற்ப பந்து வீசவம் வாய்ப்புகளை வழங்குகிறது. இதனால் 11 பேர் மட்டுமே விளையாடக் கூடிய கிரிக்கெட் 12, 13 வீரர்கள் வரை விளையாடி அது ரசிகர்களை இன்னும் சுவாரஸ்யப்படுத்துகிறது. மேலும் பனிப்பொழிவு போன்ற காரணங்களால் ஆட்டம் ஒரு அணியினருக்கு சாதகமாக போகும் வாய்ப்பும் இதனால் தடைப்படும்.

எனவே டி20 உலக கோப்பை வருகிற ஜூன் மாதத்திலிருந்து தொடங்கும் நிலையில் கிரிக்கெட்டை மேலும் சுவாரஸ்யபடுத்த புதிய விதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த விதியின் பெயர் ஸ்டாப் கிளாக் ரூல்.

- Advertisement -

அதாவது இந்த ஸ்டாப் க்ளாக் ரூல் விதிப்படி பந்து வீசும் அணி ஒரு ஓவர் முடித்ததும், 60 வினாடிகள் கொண்ட டைமர் களத்தில் உள்ள பெரிய திரையில் ஓடும். அந்த 60 வினாடி ஓடி முடிப்பதற்குள் பந்து வீசும் அணி அடுத்த ஓவரினை வீசத் தயாராகி விட வேண்டும். இல்லையெனில் பந்து வீசத் தாமதப்படுத்தினால் மைதானத்தில் உள்ள கள நடுவரால் இரண்டு முறை எச்சரிக்கப்படும்.

அதையும் மீறி பந்து வீச தாமதப்படுத்தினால், பேட்டிங் செய்யும் அணிக்கு ஐந்து ரன்கள் கூடுதலாக வழங்கப்படும். மேலும் இந்த விதியானது மூன்றாவது நடுவரிடம் ரிவியூவிற்கு செல்லும்போது செயல்படாது. இதனால் போட்டி குறித்த நேரத்திற்குள் நடத்தி முடிக்கப்படும். மேலும் இந்த விதியால் கேப்டன்கள் மிக வேகமாக முடிவுகளை எடுக்காமல், அணி வீரர்களுடன் கலந்தாலோசித்து சிறந்த முடிவுகளை எடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. எனவே இந்த விதியினை வருகிற உலகக்கோப்பைத் தொடரிலிருந்து ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். மேலும் இதை ஒரு நாள் போட்டியிலும் நடைமுறைப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles