இந்த தமிழ்நாட்டு பையன்தான் அடுத்த சுனில் கவாஸ்கர்.. இவர்கிட்ட அந்த விஷயம் அவ்ளோ அற்புதமா இருக்கு – நவ்ஜோத்சிங் சித்து புகழாரம்

நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் குஜராத் அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் குறித்து நவ்ஜோத் சிங் சித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

குஜராத்த அணி இந்த ஐபிஎல் சீசன் 3 போட்டிகளில் விளையாடி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூர் அணிக்கு எதிராக இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு பேட்டிங் செய்த குஜராத் அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 170 ரன்கள் குவித்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் மிகச் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார். அவர் கடந்த 3 போட்டிகளில் முறையே 74, 63, 49 என குஜராத் அணியின் வெற்றிக்கு மிகச் சிறப்பான முறையில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக இவர் ஒரு இடது கை ஆட்டக்காரராக இருக்கும் நிலையில் இந்திய அணியில் இவருக்கு எந்த வடிவத்திலும் வாய்ப்பு கொடுக்கலாம் என்று இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கூறி இருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் சாய் சுதர்சனின் தீவிரமான ரசிகராக மாறிவிட்டேன். நான் பார்த்ததில் அவர் தொழில்நுட்ப ரீதியாக சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். அவர் பேட்டிங் செய்த விதம் அற்புதம். அவர் விளையாடுவதை பார்க்கும் போது எனக்கு சுனில் கவாஸ்கர் நினைவு தான் வருகிறது. குறிப்பாக அவர் பந்தை தனது உடலுக்கு அருகில் வைத்து விளையாடுவதால் அவருக்கு இந்திய அணியில் எந்த வடிவத்திலும் வாய்ப்பு கொடுக்கலாம். குறிப்பாக நேற்று ஹேசில் வுட் பந்துவீச்சில் சாய் சுதர்சன் அடித்த ஸ்ட்ரைட் டிரைவ் இன்றளவும் சிறந்த ஷார்ட்டாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க:திடீரென 17 வயது இளம் அதிரடி வீரரை சோதனைக்கு அழைதுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்.. மாற்று வீரராக வர வாய்ப்புள்ளதா ? காசி விஸ்வநாதன் கூறியது இதுதான்

ஹாய் சுதர்சன் குறித்து அஸ்வினும் பாராட்டி பேசி இருக்கிறார். அதாவது சாய் சுதர்சன் பேட்டிங் செய்யும்போது ஏதேனும் ஒரு குறையை கண்டால், அடுத்த மாதம் அவரது பேட்டிங்கில் அந்த குறை இருக்காது அதற்குள் அதை நிவர்த்தி செய்து விடுவார். அந்த அளவிற்கு தன்னை மெருகேற்றி வருவதில் சிறப்பான ஒரு வீரர் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டி பேசியிருக்கிறார். சாய் சுதர்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles