திடீரென 17 வயது இளம் அதிரடி வீரரை சோதனைக்கு அழைதுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்.. மாற்று வீரராக வர வாய்ப்புள்ளதா ? காசி விஸ்வநாதன் கூறியது இதுதான்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து இரண்டு தோல்விகளைச் சந்தித்து சவாலான நிலையில் உள்ளது. சமீபத்திய போட்டிகளில் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் தடுமாறியது ரசிகர்களை ஏமாற்றியுள்ளது. குறிப்பாக ஓப்பனிங் மற்றும் மிடில் ஆர்டரில் அதிரடியாக ஆடக் கூடிய வீரர் இல்லாமல் தவிக்கிறது.

- Advertisement -

மேலும், அனைத்து அணிகளும் இளம் உள்நாட்டு வீரர்களை கண்டறிந்து வாய்ப்பளித்து அதில் அதீக பயன்பெற்று வருகிறது. உதாரணமாக, மும்பைக்கு விக்னேஷ் புத்தூர் & அஸ்வானி குமார், ஹைதராபாத்துக்கு அனிக்கேத் வர்மா, பஞ்சாப்க்கு பிரியன்ஷ் ஆர்யா, லக்னோவுக்கு டிக்வேஷ் & பிரின்ஸ், டெல்லிக்கு விப்ராஜ் நிகாம் மற்றும் பல இளம் நட்சத்திரங்கள் இந்த ஐ.பி.எலில் ஜொலித்துள்ளன. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலோ அவ்வாறு எந்த ஒரு வீரருக்கும் இந்த ஆண்டு இன்னும் வாய்ப்புக் கொடுக்கவில்லை.

- Advertisement -

சென்னை அணியின் சுமாரான மிடில் ஆர்டரில் ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பளித்து பார்க்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் அதற்கு ஏற்றவாறு சென்னை அணி ஒரு அடியை எடுத்து வைக்கும் வகையில், மும்பையைச் சேர்ந்த 17 வயது ஆயுஷ் மஹாட்ரேவை சோதனைக்கு அழைத்துள்ளது. ஒருவேளை இவரை அணியில் எடுக்க சென்னை விரும்பினால், அது ஏதேனும் ஒரு காயபட்ட வீரருக்கு மாற்றாக மட்டுமே எதுக்க இயலும், நேரடியாக அணியில் எடுப்பது சாத்தியம்மில்லை. இதுப் பற்றி சென்னை நிர்வாகி காசி விஸ்வநாதன் பேசியுள்ளார்.

- Advertisement -

அவர் பேசியிருப்பதவது, “ சோதனையில் ஆயுஷ் மஹாட்ரே சிறப்பாக செயல்பட்டு எங்களை ஈர்த்துள்ளார். ஆனால் இப்போதைக்கு அணியில் எந்த ஒரு வீரருக்கும் காயமில்லை, தேவைப்பட்டால் மாற்று வீரர்களைத் தேர்வு செய்வோம். ” என்றார். இந்த ஆயுஷ் மஹாட்ரே எனும் இளம் வீரர் ஏற்கனவே ஏலத்திற்கு முன்பு சென்னை அணியின் சோதனைக்கு வந்துள்ளார். ஆனால் ஏலத்தில் அவரை எந்த ஒரு அணியில் வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மும்பை இளம் நட்சத்திரம், கடந்த விஜய் ஹசாரே தொடரில் 2 சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் என 458 ரன்களும், ரஞ்சித் தொடரில் 471 ரன்களும் குவித்து சிறப்பான ஃபார்மில் உள்ளார். இது போன்ற இளம் வீரர்கள் சென்னை அணியில் இணைய வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோளும் கூட. இவரை இந்த ஆண்டு மாற்று வீரராக சென்னை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

இப்போதிக்கி தோல்வியை மறந்து, ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றியை நோக்கி பயணிப்பது மிகவும் அவசியம். அடுத்தப் போட்டி ஏப்ரல் 5 அன்று சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles