நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்த வரை வங்காளதேச வீரரான முஸ்தபிகுர் ரகுமான் முக்கிய பந்து வீச்சாளராக உருவெடுத்து இருக்கிறார். சென்னை அணி பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கிய போது தனது முதல் போட்டியை சிஎஸ்கே அணிக்காக விளையாடிய முஸ்தபிகுர் ரஹ்மான் அப்போட்டியில் சிறப்பாக பந்துவீசி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
அவர் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி தற்போது வரை 11 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். தற்போது சிஎஸ்கே அணியின் முக்கிய பந்துவீச்சாளராக பதிராணா மற்றும் முஸ்தபிக் ரகுமான் ஆகியோர் திகழ்கிறார்கள். ஆனால் முஸ்தபிகுர் ரஹ்மான் மே மாதம் முதல் தேதியில் வங்காளதேச அணி ஜிம்பாப்வே அணியுடன் டி20 தொடரில் மோதுவதால் மே 1ஆம் தேதியோடு முஸ்தபிகுர் ரஹ்மான் சிஎஸ்கே அணியில் இருந்து விலகுகிறார்.
இது நிச்சயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏப்ரல் 31ஆம் தேதியோடு வெளியிட வேண்டிய அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியுடன் மே 1ஆம் தேதி நடைபெற உள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியோடு அவர் சென்னை அணியில் இருந்து வெளியேறுகிறார்.
இந்த நிலையில் முஸ்தபிகுர் ரஹ்மான் பங்களாதேஷ் அணியில் விளையாடுவதை விட சென்னையில் விளையாடும் போது அதிக உற்சாகமாய் இருக்கிறார் என்று வங்காளதேச அணியின் வேகப்பந்துவீச்சாளர் சோரிபுல் இஸ்லாம் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் மேலும் கூறும் பொழுது
“நான் ஐபிஎல்லில் முஸ்தபிர் ரஹ்மான் விளையாடும் ஒவ்வொரு போட்டிகளை மட்டும் இல்லாமல் அவர் வீசும் ஒவ்வொரு பந்தையும் பார்த்து வருகிறேன்.
ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் தொலைபேசியின் வாயிலாக போட்டி குறித்து கலந்துரையாடுவேன். பங்களாதேஷ் அணிக்கு விளையாடுவதை விட அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் போது அதிக மகிழ்ச்சியாக இருக்கிறார். ஏனெனில் பங்களாதேஷ் அணியில் விளையாடும் போது அதிக அழுத்தம் அதிகரிக்கும். ஐபிஎல்லில் அது போன்ற அழுத்தங்கள் எதுவும் கிடையாது.
இதையும் படிங்க:தோனிக்கு வழங்கப்பட்டு இருக்கும் புதிய பொறுப்பு.. அதனாலதான் அவர் கடைசியா பேட்டிங் செய்யப் வர்றார்.. கூறுகிறார் பயிற்சியாளர் பிளமிங்
அழுத்தத்தின் காரணமாக அவர் கடந்த போட்டிகளில் சரியாக விளையாடாமல் போய் இருக்கலாம். சர்வதேச அணிக்காக விளையாடும்போது அந்த அழுத்தம் செயல் திறனை பாதித்திருக்கும்” என்று கூறியிருக்கிறார். எனவே முஸ்தஃபிகுர் ரஹ்மானுக்கு மாற்று வீரராக எடுக்கப்பட்ட இங்கிலாந்து அணியைச் சேர்ந்த க்ளீசன் இவரது இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

