நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டியில் வெற்றியும், மூன்று போட்டியில் தோல்வியும் தழுவி தற்போது புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளன.
இந்த நிலையில் மகேந்திர சிங் தோனியை பார்க்க மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் அவர் முன்னரே களமிறங்கி நீண்ட நேரம் களத்தில் விளையாடு வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் தோனி கடைசியில் இறங்கி குறுகிய பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு அதிரடியாக விளையாடி வருவதால் அவர் முன்னரே களமிறங்கி கூடுதல் பந்துகளை சந்தித்து விளையாடினால் அது அணிக்கு நல்ல விஷயமாக அமையும்.
மேலும் எதிரணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை வெற்றி இலக்காக நிர்ணயிக்க முடியும் என்று அனைவரும் கருத்து தெரிவிக்கும் வேளையில், அணியின் பயிற்சியாளர் ஆன ஸ்டீபன் பிளமிங் மகேந்திர சிங் தோனிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் அதனால் அவர் குறுகிய பந்துகளை மட்டுமே சந்திக்கப் போகிறார் என்றும் கூறியிருக்கிறார்.
இது குறித்த அவர் விரிவாக கூறும் பொழுது
“தோனிக்கு புதிதாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு வயதாகி வருவதால், அவரை முன்பே பேட்டிங்கில் களம் இறக்குவது கடினம். எனவே அவர் இறுதியாக களமிறங்கி அதிக ரன்களை அடிக்க வேண்டிய பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டிருக்கிறது. அதை அவர் தற்போது மிகச் சிறப்பாக செய்து வருகிறார்.
தோனி அதற்காக தன்னை சிறந்த முறையில் தயார்படுத்திக் கொண்டுள்ளார். அணியின் முன் வரிசை வீரர்கள் நல்ல ஸ்கோரை அடித்து விட்டு வந்தால் மகேந்திர சிங் தோனி இறுதியாக இறங்கி அந்த ஸ்கோரை பெரிய அளவில் மாற்ற முடியும். இது மற்ற வீரர்களுக்கு உத்வேகம் தரும் வகையில் அமைந்துள்ளது. மகேந்திர சிங் தோனி அதிரடியாக விளையாடும் விதத்தை பார்த்து நாங்கள் ஆச்சரியப்படவில்லை. ஏனென்றால் இவர் இதற்காக தயாராகும் விதத்தை நாங்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
இதையும் படிங்க:ஆர்சிபியின் ஸ்லீப்பர் செல்லா இவர்?. ட்ரோல் செய்து வரும் ரசிகர்கள்.. இவருக்கு இதுதான் கடைசி வாய்ப்பு
எனவே இவரது அதிரடி எங்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது” என்று கூறியிருக்கிறார். எனவே தோனியின் அதிரடி ஆட்டம் இந்த போட்டியிலும் தொடர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் இரண்டு அணிகளுமே வெற்றிக்காக போராடும் என்பதால் இந்த போட்டி அனல் பறப்பது உறுதி.

