நல்லவேளை.. தப்பிச்சோம்.. காயம் அடைந்த வீரர் கம்பேக்.. மகிழ்ச்சியில் சிஎஸ்கே

ஐபிஎல் 2024 டி20 லீக் தொடர் வருகிற வெள்ளிக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டியில் தோனி ரசிகர்கள் அதிகம் கொண்ட சென்னை அணிக்கும், விராட் கோலி ரசிகர்கள் அதிகம் கொண்ட பெங்களூர் அணிக்கும் தொடங்குகிறது.

- Advertisement -

ஐபிஎல்லின் வலிமையான அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். மற்ற அணிகளில் உள்ள அதிரடி நட்சத்திர வீரர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் சென்னை அணியின் வலிமை என்பது சற்று குறைவு என்று தான் சொல்ல வேண்டும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஓரளவு வலிமை கொண்டு இருந்தாலும், எம்எஸ் தோனியின் கேப்டன்சியும், அணியின் ஒற்றுமையுமே சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.

- Advertisement -

மற்ற அணிகளில் விளையாடி பார்ம் அவுட் ஆன வீரர்கள் கூட சென்னை அணியில் எடுக்கப்பட்டால் ஒரு சில ஆட்டங்களிலேயே மீண்டும் பார்முக்கு வந்து தனது அதிரடியைத் தொடங்கி விடுவார்கள். அந்த அளவிற்கு ராசியான அணி சென்னை சூப்பர் கிங்ஸ். ஏலத்திற்கு முன்பே வலிமையாக திகழ்ந்த சென்னை அணி ஏலத்திற்கு பின்பு டாரி மிட்சல், ரச்சின் ரவீந்திரா, சமீர் ரிஸ்வி, முஸ்தபிகுர் ரகுமான் ஆகியோரின் வருகையால் மிக வலிமையாக காணப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் வீரர்களின் காயத்தால், அணி கொஞ்சம் சிக்கலில் இருந்தது என்பதே உண்மை. முதலில் சிவம் தூபே காயம் அடைந்தார். பின்பு அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே காயம் காரணமாக வெளியேறினார். பின்னர் இலங்கை அணியின் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா வங்காளதேச தொடரின் போது காயம் காரணமாக வெளியேறினார்.

அவருக்கு மாற்று வீரராகக் கருதப்பட்ட வங்காளதேச அணியின் முஸ்தபிகுர் ரஹ்மானும் இலங்கை அணிக்கு எதிரான தொடரிலேயே உடலில் ஏற்பட்ட கிராம்ப் காரணமாக போட்டியின் பாதியிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இதனால் அவரும் சென்னை அணிக்கு கிடைக்க மாட்டாரா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் தற்போது ஒரு நற்செய்தியாக முஸ்தபிகுர் ரகுமான் உடல் நலம் தேறியிருக்கிறார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

- Advertisement -

உடலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வெளியேறிய அவருக்கு குறிப்பிடப்படும் படி எந்த தொந்தரவும் இல்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் முஸ்தபிகுர் ரகுமான் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில்
“உற்சாகமாகவும் எனது புதிய பணிக்காகவும் காத்திருக்கிறேன். ஐபிஎல் 2024க்காக சென்னைக்கு செல்கிறேன். உங்கள் பிரார்த்தனையில் என்னை காத்துக் கொள்ளுங்கள், அதனால் என்னால் முடிந்ததை அணிக்குச் செய்ய இயலும்” என்று தகவல் வெளியிட்டு இருக்கிறார்.

இதனால் சென்னை அணியின் பந்துவீச்சு தற்போது மீண்டும் வலுவடைந்துள்ளது. இவரது வருகையை ஒட்டி சென்னை அணி நிர்வாகமும், ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். எனவே இவர் முதல் போட்டியில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles