போராடிய சாய் சுதர்சன் – வாஷிங்டன் சுந்தர்.. பும்ரா வீசிய ஒரேயொரு ஓவர்.. குஜராத் அணி வெளியேற்றம்

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்களை விளாசியது. அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்களை குவித்தார். 

- Advertisement -

சுப்மன் கில் அவுட்

இதன்பின் குஜராத் அணிக்காக சாய் சுதர்சன் – சுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தது. இதில் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே சுப்மன் கில் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, உடனடியாக குசால் மெண்டிஸ் களமிறக்கப்பட்டார். இதன்பின் 3 ஓவர்கள் வரை நிதானம் காத்த இருவரும், 4வது ஓவர் முதல் பவுண்டரியை விளாச தொடங்கினர். அதில் ஹர்திக் வீசிய ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் அடிக்கப்பட்டது.

- Advertisement -

இதனால் 6 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 66 ரன்களை சேர்த்திருந்தது. அப்போது சான்ட்னர் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அந்த ஓவரின் 2வது விக்கெட்டில் குசால் மெண்டிஸ் ஹிட் விக்கெட்டாகி 20 ரன்களில் ஆட்டமிழக்க, சாய் சுதர்சன் – வாஷிங்டன் சுந்தர் கூட்டணி இணைந்தது. இருவரும் ஒவ்வொரு ஓவரில் குறைந்தது ஒரு பவுண்டரியை விளாசி தள்ளினர். இதனால் குஜராத் அணி ஓவருக்கு குறைந்தது 10 ரன்களை சேர்த்தது.

- Advertisement -

பும்ரா கொடுத்த மாற்றம்

இதன்பின் வாஷிங்டன் சுந்தர் சிக்சரில் டீல் செய்ய, சாய் சுதர்சன் பவுண்டரியில் டீல் செய்தார். அதிலும் போல்ட் வீசிய ஓவரில் 18 ரன்கள் குவிக்கப்பட, உடனடியாக மும்பை அணியின் சூர்யகுமார் கால் பிடிப்பு என்று 5 நிமிடங்கள் ஆட்டத்தை நிறுத்தினார். இதனால் பும்ராவின் யார்க்கரில் வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின் வந்த ரதர்போர்ட் பவுண்டரிகளாக விளாசினாலும், சாய் சுதர்சன் 49 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் குஜராத் அணியின் நம்பிக்கை முடிவுக்கு வந்தது. பின் சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் ரதர்ஃபோர்ட் 24 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. அந்த ஓவரில் குஜராத் அணி 3 ரன்களை மட்டுமே மும்பை அணி விட்டுக் கொடுத்தது. இதனால் மும்பை அணி வெளியேறியது. நாளை மறுநாள் நடக்கும் குவாலிஃபையர் 2வது போட்டியில் பஞ்சாப் – மும்பை அணிகள் விளையாடுகின்றன.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles