சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் எம்எஸ் தோனி தனது பயிற்சியை நிராகரித்தார் என்று கூறப்பட்டு வரும் வேளையில் எம்எஸ் தோனிக்கு பதிலாக அடுத்த கேப்டனாக யார் செயல்பட போகிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருத்ராஜ் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக எம்எஸ் தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழிநடத்தினார். ஆனால் இருப்பினும் தோல்வி பாதையில் இருந்து சிஎஸ்கே அணியை மீட்டு வர முடியவில்லை. இந்த சூழ்நிலையில் எம்எஸ் தோனி மினி ஏலத்திற்கு வருவதற்கு முன்பாக அடுத்த ஆண்டு விளையாடப் போகும் சிஎஸ்கே அணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அதனால் பல புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அத்தனை சோதனை முயற்சிகளும் செய்து வரும் நிலையில், இன்று நடைபெற உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி தனது பயிற்சி நிராகரித்தார் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவாரா? அல்லது மாட்டாரா? என்கிற சந்தேகமும் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் எம்எஸ் தோனி ஒருவேளை மீதமுள்ள போட்டிகளில் விளையாட வில்லை என்றால் அவருக்கு பதிலாக சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை ஏற்கப் போவது யார் என்கிற சந்தேகம் வலுத்து உள்ளது.
ஏனென்றால் தோனிக்கு அடுத்ததாக உள்ள ரவீந்திர ஜடேஜா ஏற்கனவே கேப்டனாக நியமிக்கப்பட்டு அவரது தலைமையில் சிஎஸ்கே அணி பல தோல்விகள் அடைந்ததால் மீண்டும் கேப்டனாக எம்எஸ் தோனியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தோனி ஒரு வேலை விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ் அணியில் சிகார் தவான் காயம் காரணமாக வெளியேற, அவருக்கு பதிலாக கேப்டனாக பதவி வகித்த சாம் கரண் சிஎஸ்கேவில் விளையாடி வருகிறார்.
இதையும் படிங்க:எம்எஸ் தோனி இல்லை.. நான் எல்லாவற்றையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளக்கூடிய நபர் இவர்தான் – விராட் கோலி பேட்டி
ஏற்கனவே அவரது தலைமையில் பஞ்சாப் அணி பல வெற்றிகளை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே தோனி ஒருவேளை மீதமுள்ள போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டவில்லை என்றால் அவருக்கு பதிலாக ஷாம் கரண் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கலாம். இருப்பினும் சிஎஸ்கே பவுலிங் கோச் தரப்பில் கூறப்படும் போது, எம்எஸ் தோனி தனது பயிற்சியை நிராகரித்தாரே தவிர போட்டிகளில் போட்டிகளில் விளையாடுவது உறுதியாக தெரிகிறது என்று பேசியிருக்கிறார்.

