இந்திய கிரிக்கெட்டின் முடி சூடா மன்னனாக திகழ்ந்த மகேந்திர சிங் தோனி வருகிற ஜூலை 7ஆம் தேதி தனது 43 வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.
இந்த பிறந்த நாளை முன்னிட்டு இந்திய ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ட்ரீட் காத்திருக்கிறது.
1983ஆம் ஆண்டு முதன்முதலாக இந்திய அணி உலக கோப்பையை வென்ற பிறகு கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு மகேந்திர சிங் தோனி தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் டி20 உலக கோப்பையை வென்ற வரலாற்று சாதனை படைத்தது. அதற்கு முன்னர் அதே 2007ஆம் ஆண்டில் வலுவான வீரர்களைக் கொண்டு ஒரு நாள் உலக கோப்பையில் தோல்வியை தழுவிய இந்திய அணி, அனுபவமே இல்லாத புதிய கேப்டன், அனுபவம் இல்லாத இளம் வீரர்களைக் கொண்டு டி20 உலக கோப்பையை வென்ற போது உலகப் பார்வை தோனி பக்கம் திரும்பியது.
அடுத்த 2011 ஆம் ஆண்டில் அனுபவமான வீரர்கள் மற்றும் தான் உருவாக்கிய இளம் வீரர்களைக் கொண்டு 2011ம் ஆண்டு 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் உலக கோப்பையை வென்று சரித்திர சாதனை படைத்தது. அதற்குப் பிறகு 2013ஆம் ஆண்டு மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் தோனி தலைமையிலேயே வென்றது.
இந்த நிலையில் அவரது வாழ்க்கை வரலாறை குறிப்பிடும் விதமாக 2016 ஆம் ஆண்டு “எம் எஸ் தோனி அண்ட் டோல்ட் ஸ்டோரி” என்ற திரைப்படம் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கழித்து தோனி தனது 43 வது பிறந்த நாளை வருகிற ஜூலை 7ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில், எம் எஸ் தோனி திரைப்படத்தை ஜூலை 5 முதல் 11 ஆம் தேதி வரை திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.
மொத்தமாக ஏழு நாட்கள் இந்த திரைப்படம் திரையரங்குகளில் ஓடும் வகையில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இந்தத் திரைப்படம் 2016 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்ட போதே கிட்டத்தட்ட 216 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்தது. ஒரு சினிமா நட்சத்திரம் அல்லாத ஒரு கிரிக்கெட் வீரரின் திரைப்படம் வாழ்க்கை வரலாறு அது இத்தனை கோடிகள் வசூல் செய்வது என்பது மகேந்திர சிங் தோனிக்கு மட்டுமே நடந்துள்ளது.
இதையும் படிங்க:விராட் கோலிய பத்தி 10 தடவை என்கிட்ட கேட்டாங்க.. நான் 10 தடவையும் ஒரே பதில்தான் சொன்னேன்.. அது மாதிரியே பண்ணிட்டாரு- பாண்டிங் பேட்டி
இதனால் இந்த திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதை அறிந்த ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். வருகிற ஏழாம் தேதி தோனியின் பிறந்தநாள் மட்டும் அல்லாமல் அவரது திரைப்படமும் ரிலீஸ் ஆவது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டை கொடுத்திருக்கிறது.

