டி20 உலக கோப்பையில் இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தார். அவரே டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
இந்த சூழ்நிலையில் விராட் கோலி குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரக்கி பாண்டின் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த டி20 உலக கோப்பையில் விராட் கோலியை தேர்வு செய்வது குறித்து இந்திய அணி நிர்வாகத்தில் சில சர்ச்சைகள் எழுந்தது. குறிப்பாக விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதால், அவரை இந்திய அணையில் எடுக்க வேண்டாம் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியதாக சில சர்ச்சைகளும் எழுந்தன. இதையும் கடந்து விராட் கோலி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் விராட் கோலிக்கு இந்த தொடர் சிறப்பாக அமையவில்லை. இறுதிப் போட்டிக்கு முன்பு வரை ஏழு போட்டிகளில் மொத்தமாக வெறும் 75 ரன்கள் மட்டுமே குவித்திருந்த நிலையில், இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி தன் மீதான விமர்சனங்களை மொத்தமாக தூக்கி எறிந்தார். அந்தப் போட்டியில் 76 ரன்கள் குவித்து இந்திய அணி உலக கோப்பையை வெல்ல விராட் கோலியும் கடைசியில் ஒரு காரணமாக அமைந்தார்.
இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங் விராட் கோலி குறித்து கூறும் பொழுது “உலகக் கோப்பை டி20 தொடருக்கு விராட் கோலி சேர்க்க வேண்டுமா? என்பது போன்ற கேள்விகள் என்னிடம் ஒரு பத்து முறையாவது கேட்கப்பட்டிருக்கும். ஆனால் தொடக்கத்தில் அவர் விரும்பிய படி எதுவும் அவருக்கு சரியாக அமையவில்லை. ஆனால் அவரது தேர்வு குறித்து என்னிடம் கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தன. என்னிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் விராட் கோலி இக்கட்டான சூழ்நிலையில் நிச்சயமாக பார்முக்கு வருவார் என்று கூறியிருந்தேன்.
நான் கூறியது போலவே விராட் கோலியும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும் அன்றைய நாளில் அவருக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். இருந்தாலும் அதனை சமாளித்து வெற்றிகரமாக விளையாடினார்.
இதையும் படிங்க:அந்த 7 நொடிகள்.. என் வாழ்வில் மறக்க முடியாத தருணம்.. கேட்ச் பற்றி நான் நினைக்கவில்லை- சூரியகுமார் பேட்டி
அன்றைய நாள் அவருக்கு சாதகமாக அமையவில்லை. குறைவான ஸ்டிரைக் ரேட்டில் அரை சதம் அடித்தார் ஆனால் அதை எட்டிய பிறகு அவரது ஆட்டம் வேறு மாதிரியாக இருந்தது. சூழ்நிலைக்கு தகுந்தவாறு சிறப்பாக ஆட்டத்தை விராட் கோலி வெளிப்படுத்தினார்” என்று பாண்டிங் கூறியிருக்கிறார்.

