அந்த 7 நொடிகள்.. என் வாழ்வில் மறக்க முடியாத தருணம்.. கேட்ச் பற்றி நான் நினைக்கவில்லை- சூரியகுமார் பேட்டி

இந்திய அணி தற்போது டி20 உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பது விராட் கோலியின் பேட்டிங் மற்றும் இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாண்டி இறுதிக்கட்டத்தில் இந்திய அணியின் வெற்றியை நிர்ணயித்தது சூரியகுமார் பிடித்த அந்த ஒரு கேட்ச்.

- Advertisement -

அந்த கேட்ச் பிடிப்பதற்கு முன்பாக அந்த தருணத்தில் தான் நினைத்த நிகழ்வுகள் குறித்து சூரியகுமார் யாதவ் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி வெற்றி பெற ஆறு பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டபோது, அதற்கு ஆபத்தாக நின்று கொண்டிருந்தவர் தென்னாப்பிரிக்க அணியின் டேவிட் மில்லர். அப்போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்தது வீச்சாளர்களான பும்ரா மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோருக்கு ஓவர்கள் இல்லாத காரணத்தால், கேப்டன் ரோஹித் சர்மா முழுமையாக நம்பி ஹர்திக் பாண்டியாவுக்கு கடைசி ஒருவரை கொடுத்தார்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா முதல் பந்தை புல்டாஸ் ஆக வீச, டேவிட் மில்லர் அதனை நேராக தூக்கி அடிக்க எல்லைக்கோட்டில் நின்று கொண்டிருந்த சூரியகுமார் யாதவ் அதை அற்புதமாக எட்டிப்பிடித்து டேவிட் மில்லரை அவுட் ஆக்கி வெளியேற்றினார். அந்த ஒரு அவுட் தென்னாபிரிக்கா அணியின் ஆட்டத்தை அப்படியே முற்றிலுமாக மாற்றியது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் தான் பிடித்த கேட்ச் குறித்து சூரியகுமார் யாதவ் கூறும் பொழுது “பந்தை பார்த்த பின் நான் ஓடுவதற்கு முன்னால் கேட்ச் பற்றி நான் சிந்திக்கவில்லை. அதை எப்படியாவது பௌண்டரியிலிருந்து தடுத்து விட வேண்டும் என்று தான் நினைத்து ஓடினேன். அதை தடுத்து எப்படியாவது மூன்று ரன்கள் இந்திய அணிக்காக சேமிக்க வேண்டும் என்று நினைத்தேன். உண்மையில் நான் கேட்ச் பற்றி சிந்திக்கவில்லை. நான் பந்துக்கு அருகே ஓடும் போது மட்டுமே என்னால் அதை பிடிக்க முடியும் என்று உணர்ந்தேன்.

- Advertisement -

அதை பௌண்டரியில் இருந்து முதலில் வெளியே தள்ளிவிட்டு பிறகு அதைப் பிடித்துக் கொள்ளலாம் என்று நினைத்து தான் பௌண்டரிலியிருந்து பந்தை மேலே தூக்கி வீசினேன். நல்ல வேலையாக அது என்னால் பிடிக்க முடிந்தது.அந்த முடிவை எடுப்பதற்கு எனக்கு ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் மட்டுமே இருந்தது. அந்த ஏழு நிமிடங்கள் என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.

இதையும் படிங்க:இந்தியா பாகிஸ்தானுக்கு வருமா.? இது மூலமா ஐசிசி யாருக்கு சப்போர்ட்னு தெரியும்- சல்மான் பட் பேட்டி

அந்த முடிவு தான் தற்போது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று சூரியகுமார் யாதவ் கூறினார். 1983 உலக கோப்பையில் கபில்தேவ் பிடித்த கேட்ச்சும், 2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணிக்காக ஸ்ரீசாந்த் பிடித்த கேட்ச்சும், அதேபோல நடப்பு டி20 உலக கோப்பையில் சூரியகுமார் பிடித்த கேட்ச்சும் மறக்க முடியாத தருணங்களாக அமைந்திருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles