இதுனால தான் அவரு தல.. தோனி எடுத்த அந்த முடிவு.. இப்போ வர நம்ப முடியல.. அப்படியே ஆடி போயிட்டேன்

2025 ஆம் வருடத்தில் ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வர இருக்கின்ற 22 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அதிரடியான இந்தப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் சர்வதேச வீரர்கள் மற்றும் இந்திய அணியின் வீரர்கள் தங்களது ஐபிஎல் அணிகளுடன் இணைந்து தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கான தேதி நெருங்கி வரும் வேளையில் அனைத்து அணிகளும் தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணி, ஹைதராபாத் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த வருட ஐபிஎல் தொடரின் ஏலத்திற்கு முன்பாக விடுவிக்கப்பட்டார். மேலும் அவரை ஏலத்தில் வாங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களது அணிக்கு கேப்டனாகவும் நியமித்திருக்கிறது.

- Advertisement -

மேலும் நடப்புச் சாம்பியனான கொல்கத்தா அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான அஜிங்கிய ரஹானேவை தங்களது அணிக்கு புதிய கேப்டனாக நியமித்திருக்கிறது. மேலும் கொல்கத்தா அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை அந்த அணி துணை கேப்டனாக நியமித்திருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வெங்கடேஷ் ஐயரை அந்த அணி நிர்வாகம் மீண்டும் 23 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடருக்கு முன்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசிய வெங்கடேஷ் ஐயர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்திருக்கிறார். மேலும் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியனாக தொடர்வதற்கான அனைத்து முயற்சிகளையும் அணியும் வீரர்களும் மேற்கொள்வார்கள் என தெரிவித்திருக்கிறார். மேலும் கேப்டன்சி மற்றும் தலைமை பொறுப்பு குறித்து பேசிய வெங்கடேஷ் ஐயர், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனுமான தல தோனியை உதாரணமாக கூறினார். ஒரு கேப்டன் களத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு மகேந்திர சிங் தோனி சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார் எனவும் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

கேப்டனாக மகேந்திர சிங் தோனி ஒரு வீரரிடமிருக்கும் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து அதற்கேற்றார் போல் துரிதமான முடிவுகளை களத்தில் செயல்படுத்தி தனது அணியின் வெற்றிக்காக வியூகங்களை அமைக்கக்கூடியவர் என தெரிவித்திருக்கிறார். இது போன்ற ஒரு அனுபவம் தனக்கும் நிகழ்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 2023 ஆம் வருடம் சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டிருந்தபோது ஸ்கொயர் லெக் திசையில் நின்று கொண்டிருந்த வீரரை 30 அடி வட்டத்திற்கு வெளியேற்றிய தோனி தேர்டு மேனில் நின்று கொண்டிருந்த வீரரை உள் வட்டத்திற்குள் அழைத்து வழக்கமான வியூகம் இல்லாமல் சற்று வித்தியாசமான இடத்தில் அந்த வீரரை தோனி நிறுத்தியதாக தெரிவித்தார் வெங்கடேஷ் ஐயர்.

தோனி ஃபீல்டிங்கை மாற்றியமைத்ததற்கு அடுத்த பந்திலேயே அந்த வீரரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் போட்டி முடிந்த பிறகு நான் அந்த இடத்தில் பந்தை அடிப்பேன் என எப்படி கணித்தீர்கள் என்று கேட்டபோது, உங்களது மட்டை வீசும் விதத்தில் பந்து படும்போது அந்த வீரர் இருக்கும் திசைக்கு கேட்ச் செல்லும் என்று கணித்தேன். அதுபோன்று நடந்து விட்டது எனக் கூறியதாக தெரிவித்திருக்கிறார். மேலும் களத்தில் இருக்கும்போது வீரர்களின் அசைவு மற்றும் போட்டியின் போக்கு என அனைத்து விதங்களையும் கூர்ந்து கவனிப்பதில் மகேந்திர சிங் தோனிக்கு நிகராக யாரும் இல்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles