வெறும் பேப்பர்ல மட்டும் தாங்க அவர் கேப்டன்.. ஆனா களத்துல எல்லாமே எம்எஸ் தோனிதான்.. அவர் இல்லாமல் அணுவும் அசையாது.. முன்னாள் வீரர் சர்ச்சை பேச்சு

அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம் எஸ் தோனி இம்பாக்ட் பிளேயராக மட்டுமே களமிறங்குவார் என்று பெரும்பாலானோர் தங்களது கருத்துக்களை கூறி வரும் நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான முகம்மது கைப் இதனை திட்டவட்டமாக மறுத்து சில சர்ச்சை கருத்துக்களை கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “காகிதத்தில் வேண்டுமானால் ருத்ராஜ் கேப்டனாக இருக்கலாம். ஆனால் ஆடுகளத்தில் அனைத்தும் எம்எஸ் தோனியின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும். தோனி இப்போது பேட்டிங் செய்வதற்காக விளையாடுவதில்லை. 20 ஓவர் கீப்பிங் செய்வதற்கும், 20 ஓவர் கேப்டன்சி செய்வதற்கு மட்டுமே விளையாடுகிறார். வீரர்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கிறார். மேலும் கேப்டனுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க:சிஎஸ்கே கண்டிப்பா இந்த இந்திய வீரரை குறி வைங்க.. சென்னை டீம் வேற மாதிரி இருக்கும்.. முகமது கைப் பேட்டி

- Advertisement -

எனவே அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதில் எந்த விதமான சந்தேகமும் கிடையாது. இதனால் அவர் இம்பாக்ட் பிளேயராக விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை. ஒன்று தன்னை விளையாட்டில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார் அல்லது இதிலிருந்து முழுமையாக விளக்கிக் கொள்வார் என்று கைப் சர்ச்சையாக பேசி இருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரிலும் எம் எஸ் தோனி விளையாடுவார் என்று சில தினங்களுக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது நினைவு இருக்கலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles