சிஎஸ்கே கண்டிப்பா இந்த இந்திய வீரரை குறி வைங்க.. சென்னை டீம் வேற மாதிரி இருக்கும்.. முகமது கைப் பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளை காட்டிலும் பலம் வாய்ந்த அணியாக களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் இந்திய வீரர் ஒருவரை வாங்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைப் கூறியிருக்கிறார்.

- Advertisement -

10 அணிகள் கலந்து கொள்ள உள்ள ஐபிஎல் மினி ஏலமானது அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறிப்பிட்ட சில வீரர்களை வாங்கினால் அடுத்த ஐபிஎல் தொடருக்கு தயாராக களம் இறங்கும். இந்த சூழ்நிலையில் இந்திய இளம் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் மதுவாலை சிஎஸ்கே குறிவைக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க:ஜடேஜா, பிரெவிஸ்.. ராஜஸ்தான் கூறிய பெயர்கள்.. சிஎஸ்கே முடிவு என்ன? 

- Advertisement -

இது குறித்து அவர் “சிஎஸ்கே இந்த ஐபிஎல் தொடரில் ஆகாஷ் மதுவாலை குறி வைக்க வேண்டும். ஏனென்றால் சென்னை ஆடுகளங்கள் நன்கு வறட்சியாக காணப்படும். மேலும் சிஎஸ்கேவில் குறிப்பிடத்தக்க வீரர்களான தீபக்சகர் மற்றும் சர்துல் தாகூர் போன்ற வீரர்கள் கிடையாது. மேலும் அவர்கள் குறிப்பிடத்தக்க சுழற் பந்துவீச்சாளரை வாங்க வேண்டும் என்றால் ரவி பிஸ்னாயை குறி வைக்கலாம். மேலும் சிஎஸ்கே அணியில் முக்கிய பௌலராக இந்த முறை நாதன் எல்லீஸ் களமிறங்குவார். மேலும் தொடக்கப்பந்து வீச்சாளர்களாக கலீல் அகமது மற்றும் அன்சூல் கம்போஜ் ஆகியோர் செயல்படுவார்கள். இந்த முறை சென்னை அணிக்கு எல்லீஸ் முக்கிய பவுலராக இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles