ஐபிஎல் தொடருக்கான ரிடெஷன் பட்டியல் விவரங்கள் நவம்பர் 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் விலக இருக்கும் சூழலில், அவரை டிரேட் செய்வதற்கு பல்வேறு முயற்சிகள் நடந்து வருகிறது. சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் தோனி ஆர்வமாக இருக்கிறார்.
ஏனென்றால் தோனிக்கு பின் சிஎஸ்கே அணியின் பிராண்ட் வேல்யூ குறையாமல் இருக்க நட்சத்திர வீரர்கள் அவசியமாக இருக்கின்றனர். இதனால் ராஜஸ்தான் அணியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ராஜஸ்தான் அணி தரப்பில் இருந்து ஜடேஜா மற்றும் டிவால்ட் பிரெவிஸ் இருவரையும் கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் ஜடேஜாவை கொடுக்க சிஎஸ்கே அணி தயாராக இல்லை. இருந்தாலும் ஜடேஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவருக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தையை தொடர தோனி அறிவுறுத்தி இருக்கிறார். அதேபோல் பிரெவிஸ்க்கு பதிலாக சாம் கரணை கொடுக்க சிஎஸ்கே அணி தயாராக இருக்கிறது. இதனால் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

