சில மாதங்களுக்கு முன்பு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் தற்போது பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் ராகுல் டிராவிட் செய்ததைப் போன்று கௌதம் கம்பீர இதில் முன்னேற வேண்டும் என்று சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக சில மாதங்களுக்கு முன்பு கௌதம் கம்பீர் பொறுப்பேற்றதில் இருந்து அவரது பயிற்சியின் கீழ் இலங்கை அணிக்கு எதிரான தொடரை 17 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி இழந்தது. அதற்குப் பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணிலேயே 46 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது அதற்குப் பிறகு சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்தது.
அதற்குப் பிறகு கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடரை 10 வருடங்களுக்குப் பிறகு இழந்துள்ளது. இந்த சூழ்நிலையில் பயிற்சியாளராக பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே கௌதம் கம்பீர் பதவியை விட்டு விலக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் வெளிப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் ஐபிஎல் கோப்பையை ராகுல் டிராவிட் வெல்லாத போதிலும் அவர் இந்திய அணிக்கு எப்படி சிறப்பாக செயல்பட்டார் என்பதை கம்பீர் உணர்ந்து அதுபோன்று செயல்பட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் பொழுது “ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக செயல்பட்ட நிலையில் அவரது தலைமையில் ஐபிஎல் அணி கோப்பையை வென்றதில்லை. இருந்தாலும் அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றதில் இருந்து முதலில் சில தவறுகளை செய்தார். ஆனால் அதிலிருந்து படிப்படியாக மீண்டு வந்து தற்போது டி20 உலக கோப்பையை வென்று அதோடு வெற்றிகரமாக தனது பயணத்தை முடித்து இருக்கிறார்.
இதையும் படிங்க:சிட்னி டெஸ்ட்.. பும்ரா கான்ஸ்டாஸ் மோதல் விவகாரம்.. தவறு யார் மீது உள்ளது.? கான்ஸ்டாஸ் விளக்கம்
எனவே அது போல கௌதம் கம்பீரும் தனது தவறுகளை திருத்திக் கொண்டு அவரது வழியில் வெற்றிகரமாக செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார். ராகுல் டிராவிட் தலைமையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் சொந்த மண்ணில் இழந்த இந்திய அணி அதற்குப் பிறகு வெளிநாட்டில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்த நிலையில் அதற்குப் பிறகு டிராவிட் தனது பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

