சிட்னி டெஸ்ட்.. பும்ரா கான்ஸ்டாஸ் மோதல் விவகாரம்.. தவறு யார் மீது உள்ளது.? கான்ஸ்டாஸ் விளக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து ரெஸ்ட் போட்டியில் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது பும்ரா மற்றும் கான்ஸ்டாஸ் ஆகியோரிடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து கான்ஸ்டாஸ் தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 185 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் முதல் நாளிலேயே தனது பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நேரத்தை கடத்துவதற்காக கூடுதல் ஓவர்களை வீச தவிர்த்து, பும்ராவின் ஓவரில் எதிர்கொண்டு விளையாட உஸ்மான் கவாஜா தாமதப்படுத்தினார். உடனே பும்ரா அவரை தயாராகும் படி வலியுறுத்த எதிர் முனையில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டாஸ் பும்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

- Advertisement -

இதற்கு பும்ராவும் திருப்பி பதிலடி கொடுக்க, இடையில் நடுவர் தலையிட்டு அந்த பிரச்சனையை பேசி சமாதானப்படுத்தினார். ஆனால் பிரச்சனை முடிந்த பிறகு வீசிய அடுத்த பந்தியிலேயே கவாஜாவை வீழ்த்தி பும்ரா அதற்கு பதிலடி கொடுத்தார். இருப்பினும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை 10 ஆண்டுகளுக்குப் பிறகு வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தற்போது அது குறித்து பேசி இருக்கும் கான்ஸ்டாஸ் தவறு தன் மீதுதான் இருக்கிறது என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது கவஜா கூடுதல் ஓவர்களை எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காக நேரத்தை தாமதப்படுத்தினார். அப்போதுதான் ஆடுகளிடத்தில் அந்த பிரச்சினை உருவானது. ஆனால் அந்த பிரச்சனையை முடிந்த பிறகு பும்ரா அவரை உடனடியாக வெளியேற்றினார். அவரை வெளியேற்றிய பெருமை அனைத்தும் பும்ராவையே சேரும். மேலும் அப்போது நடைபெற்ற பிரச்சனையில் தவறு என் மீது தான் இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க:சொன்னா கேளுங்க கம்பீர்.. ஆஸி தொடர ஜெயிக்க சச்சினை வச்சு இத பண்ணுங்க.. இல்லன்னா அவ்வளவுதான் – முன்னாள் இந்திய வீரர் WV ராமன் பேட்டி

மேலும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் பிங்க் நிற உடையில் விளையாடினோம். ஏனென்றால் புற்றுநோயால் எனது தாத்தா மற்றும் உறவினர் ஆகியோர் மறைந்தார்கள். எனவே இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி நாங்கள் அதனை மறைவதற்கு தொடர்ந்து போராடுவோம்” என்று கான்ஸ்டாஸ் கூறியிருக்கிறார். ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles