ஆர்சிபி இப்பவாச்சும் திருந்தி இருக்கும்னு நினைக்கிறேன்.. நம்ம பிளேயர்ஸ்யும் கொஞ்சம் பாருங்க பாஸ்.. தவறை சுட்டிக்காட்டும் முகமது கைஃப்

ஆர் சி பி அணியை பொறுத்தவரை நடப்பு சீசனின் முதல் பாதி மிகவும் சுமாராகவே தொடங்கியிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். முதல் பாதியில் கிட்டத்தட்ட ஏழு போட்டிகளில் தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றை விட்டே வெளியேற வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டது.

- Advertisement -

தொடர்ச்சியாக 7 போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்ட மேக்ஸ்வெல் அதற்குப் பிறகு அவரே விலகினாரோ? அல்லது ஆர்சிபி நிர்வாகம் அவரை உட்கார வைத்ததோ? என்று தெரியவில்லை. அவரை பெஞ்சில் அமர வைத்து விட்டு இந்திய வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது.

- Advertisement -

குறிப்பாக ஸ்வப்னில் சிங் மற்றும் கரண் சர்மா ஆகிய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களை அணிக்குள் கொண்டு வந்தது. குறிப்பாக தொடக்க ஓவரை ஸ்வப்னல் சிங் வீசும் படி செய்த ஆர்சிபிக்கு அதற்கு கைமேல் நல்ல பலனும் கிடைத்தது. மேலும் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வில் ஜாக்சை உள்ளே கொண்டு வந்தது.

- Advertisement -

இத்தகைய மாறுதல்களின் மூலம் பெங்களூர் அணி அடுத்த ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஒரு கட்டத்தில் பிளே ஆப் சுற்றை விட்டு வெளியேற வேண்டிய நிலைமையில் இருந்த அணி தற்போது பிளே ஆப் சுற்றுக்கு ஒரு நல்ல வெற்றி பெற்றால் உள்ளே சென்று விடலாம் என்று நிலைமையில் இருக்கிறது.

பெங்களூர் அணிக்கு குறிப்பாக வெளிநாட்டு வீரர்கள் மீது அதிக மோகம் இருக்கிறது என்றே சொல்லலாம். இது இப்போது மட்டுமல்ல காலம் காலமாக தொடரப்படும் வரலாறு. குறிப்பாக முந்தைய சீசன்களிலும் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் கிரிஸ் கெயில், ஸ்டார்க் போன்ற நட்சத்திர வீரர்களை எடுத்து விட்டு இந்திய தரமான வீரர்களை எடுப்பதில் கோட்டை விடும். வெறும் இரண்டு, மூன்று பெயர்களை வைத்துக் கொண்டு கோப்பையை வென்று விடலாம் என்ற யுக்தியை இப்போதாவது கைவிட்டு இருக்கும் என்று நம்பலாம்.

- Advertisement -

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவிக்கும் போது
“பெங்களூர் அணி வெளிநாட்டு வீரர்கள் மீது அதிக முதலீடு செய்வது இப்போதாவது நிறுத்தும் என்று நினைக்கிறேன். வெளிநாட்டு வீரர்கள் முகம் ஆர்சிபிஐ இதுவரை ஆட்டிப்படைத்தது. தற்போது அவர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை இந்திய வீரர்களுக்கும் அளிக்க வேண்டும் என்று இப்போதாவது உணர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

மேக்ஸ் வெல்லை உட்கார வைத்துவிட்டு எப்போது இந்திய வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததோ அப்போதுதான் பெங்களூரு அணியின் வெற்றியும் ஆரம்பித்தது. இது நல்ல ஒரு அறிகுறியாகும் என்று” கூறி இருக்கிறார். தற்போது ஐந்தாவது இடத்தில் இருக்கும் ஆர்சிபி சென்னை அணியுடன் ஒரு சிறப்பான வெற்றியை பதிவு செய்யும் பட்சத்தில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இதையும் படிங்க:டி20 உலகக் கோப்பை.. துளியும் விரும்பாத ரோஹித் சர்மா.. ஹர்திக் பாண்டியாவை சேர்க்கச் சொன்ன பிசிசிஐயின் முக்கிய புள்ளி.. வெளியான தகவல்

மேலும் பெங்களூர் அணியில் தினேஷ் கார்த்திக், ரஜத் பட்டிதார், லோம்ரோர் போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருப்பதாலும் கரண் ஷர்மா, ஸ்வப்னில் சிங் போன்ற தரமான சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பதாலும் அந்த அணி தற்போது பலம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. மேலும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் அதிரடி தொடரும் பட்சத்தில் பெங்களூர் அணி அடுத்த போட்டியில் நிச்சயம் வெல்லும் என்று ஆர்சிபி ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles