நல்லா கேட்டுக்கோங்க.. சாம்பியன்ஸ் டிராபியில் இந்த ஒரு இந்திய வீரர் மட்டும் இல்லன.. பாகிஸ்தான் அணி ஈஸியா ஜெயிக்கும் – அமீர் பேட்டி

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா அணியில் இல்லாததால், இந்தியாவின் பந்துவீச்சு தாக்குதலில் இருந்து அதன் பலத்தில் 40-50 சதவீதமாக குறைக்கப்பட்டது, என முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் கூறியுள்ளார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் பும்ரா சிறந்த பந்து வீசாளராக செயல்பட்டார். ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் பின் தங்கிய போதிலும், வலது கை வேகப்பந்து பேச்சாளரான பும்ரா 13.06 என்ற மிகச் சிறந்த சராசரியில் 32 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். மேலும் அவர், மூன்று முறை ஐந்து விக்கெட் என்ற சாதனையும் மற்றும் இரண்டு முறை நான்கு விக்கெட் எந்த சாதனையும் பெற்றது அவரின் நிலைத்தன்மை மற்றும் ஆட்டத்தில் ஆளுமையை வெளிப்படுத்துகிறது. ஆனாலும், அவர் சுற்றுப்பயணத்தின் முடிவில் முதுகு வலியால் அவதிப்பட்டதால், சிட்னி தொடரின் கடைசி நாளில் பந்து வீசவில்லை.

- Advertisement -

அவர் இல்லாததால் இந்தியாவின் பலம் குறைந்துவிடும்:

துபாய் சர்வதேச ஸ்டேடியத்தின் ஊடக உரையாடலின் போது டைப்ஸ் ஆப் இந்தியாவுடன் பேசிய அமீர், “பும்ரா இல்லாமல் இருப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். அவர் இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளர், மேலும் அவர், இந்திய அணியை முன்னிலையிலிருந்து வழிநடத்தும் முக்கிய வீரராகவும் உள்ளார். அவரில்லாமல் இந்தியாவின் பந்துவீச்சுத் திறன் 40-50 சதவீதமாக குறைந்து விடும் என நினைக்கிறேன்.

- Advertisement -

பாகிஸ்தான் தான் முன்னிலை பெறும்:

“பாகிஸ்தான் சமீபத்தில் விளையாடிய விதம் – ஆஸ்திரேலிய நாட்டில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து, பின்னர் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது போன்ற பாகிஸ்தானின் ஆதிக்கம் அவர்களின் வலிமையைக் காட்டுகிறது, குறிப்பாக, வெளிநாட்டு நிலைகளில் அவர்களின் வலிமையை வெளிப்படுத்துகிறது. சமீபத்திய பாகிஸ்தானின் செயல்பாடுகளைப் பார்த்தால், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் முன்னிலை பெறும் என்று நான் நினைக்கிறேன்.

பெரிய தொடர் என்று பார்த்தால் அதில் இந்திய அணி எனக்கு பிடித்தமான ஒன்றாகும். ஆனால், சமீப கால தோல்விகளால் இந்திய அணி அதிக அழுத்தத்தையும் கடுமையான விமர்சனத்தையும் சந்திக்கிறது,” என்று கூறி முடித்தார், முகமது அமீர்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles