தம்பிகளா இது தெரியாம முழிக்கிறீங்க.. நான் சொல்ற இத மட்டும் பண்ணுங்க.. பும்ரா ஓவரா பறக்க விடலாம் – இங்கிலாந்து வாகன் பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியானது ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்காத சூழ்நிலையில் பும்ரா இந்திய அணியை தலைமை தாங்கி முதல் இன்னிங்ஸில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற உறுதுணையாக இருந்தார்.

- Advertisement -

மேலும், அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8 விக்கெட்களை கைப்பற்றி போட்டியின் ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருதையும் வென்றார். பும்ராவின் இந்த வழி நடத்துதலே கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில், இந்திய அணி 2025 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கி இங்கிலாந்தில் ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ODI தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகிய போட்டிகளை விளையாட இருக்கிறது.

- Advertisement -

“இந்திய அணியின் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, முன்னாள் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை மூன்றாவது இடத்திற்கு நகர்த்தினால் பும்ராவின் பந்துவீச்சு தாக்கத்தை குறைக்க ஒரு சிறந்த வழியாக இருக்கும் என்று நம்புகிறேன்” என மைக்கேல் வாகன் ஆலோசனை கூறியுள்ளார்.

இத பயன்படுத்தி பண்ணி பாருங்க, மைக்கேல்:

மைக்கேல் வாகன் தி டெலிகிராஃப் ஒன்றில் கூறியிருப்பதாவது, “நான் என்ன நினைக்கிறேன் என்றால் ஒரு சின்ன இடம் மாற்றமானது இங்கிலாந்தில் நடை பெற இருக்கும் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற உறுதுணையாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு போட்டியில், இங்கிலாந்து அணியில் முதல் மூன்று இடங்களுக்குள் மற்றொரு இடது கை பேட்ஸ்மேன் தேவை என்பதை நேரலையில் பார்த்து தெளிவு படுத்திக் கொண்டேன்.

ஏனென்றால், ஜஸ்பிரித் பும்ரா புதிய பந்தை, வலது கை பேட்ஸ்மேனுக்கு எதிராக பயன்படுத்தும் போது பந்தை வளைத்து கால்களுக்கு எதிராக வீசுகிறார். குறிப்பாக, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் போன்ற வலது கை பேட்ஸ்மேன்கள் தடுமாறுகிறார்கள். பும்ராவை எதிர்கொள்ள இடது கை வீரர்கள் தான் மிகவும் பொருத்தமானவர்கள்” என்று கூறினார்.

அவரே 3 இடத்தில் வையுங்கள்:

மேலும் அவர், “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆசஸ் போட்டியிலும் ஸ்டோக்ஸை நம்பர் 3 ஆம் இடத்தில் வைத்திருந்தால் அவரை எதிர்க்க ஆஸ்திரேலியா அணி நேதன் லயனை கொண்டு வருவார்கள். அப்பொழுது, வேகப்பந்துவீச்சாளர் பந்து சுழலும் போது ஒரு குறுகிய இடைவெளியில் பந்து வீச மாட்டார்கள்” என தனது ஆலோசனை கூறியுள்ளார், மைக்கேல் வாகன்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles