தோனியே சொல்லிவிட்டு இப்படி செய்யலாமா?. மற்றவர்களுக்கு ஒரு நியாயம்.. தோனிக்கு ஒரு நியாயமா.? முன்னாள் கேப்டனுக்கு வழங்கப்படும் ஓவர் சலுகை

மகேந்திர சிங் தோனிக்கு இது கடைசி ஐபிஎல் சீசன் ஆக இருக்கும் என்று அனைவரும் கருதி வரும் வேளையில், அவர் காயத்துடன் ஐபிஎல் தொடரில் விளையாடுவது தற்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

முன்னாள் கேப்டன் டோனி இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக தனது கேப்டன் பதவியை ருத்ராஜிடம் ஒப்படைத்துவிட்டு தற்போது ஒரு அணி வீரராகவே விளையாடிக் கொண்டிருக்கிறார். பேட்டிங்கில் கடைசியாக இறங்கி வரும் அவர் குறைந்த பந்துகளை எதிர்கொண்டு அதிகளவு ரன்களை குவித்து வருகிறார்.

- Advertisement -

அவருக்கு தற்போது காலில் தசை நார்கிழிவு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. தோனி ரசிகர்களுக்காகவே தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார் என்று ஒரு தரப்பு கூறப்பட்டு வருகிறது. இது தோனியின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தாலும் ஒரு நடுநிலை ரசிகனாக பார்த்தால் இது தவறாகவே தெரிகிறது. அதாவது 100% உடல் தகுதி இல்லை எனில் பிளேயிங் லெவனில் முதலில் விளையாடுவது தவறு.

- Advertisement -

காயத்தை மறைத்து விட்டு போட்டிகளில் பங்கேற்பது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதற்கு முன்னர் சில வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக தனது காயங்களை மறைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது மகேந்திர சிங் தோனியும் அதே தவறை செய்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் காயத்துடன் போட்டிகளில் பங்கேற்பது தவறு என்று மகேந்திர சிங் தோனியே ஒரு முறை கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“அதாவது நான் முழுமையாக உடல் தகுதியை அடையா விட்டால் நான் போட்டிகளில் பங்கேற்க மாட்டேன். அது அணிக்கும், ரசிகர்களுக்கும் நான் செய்யும் தவறாகவும், துரோகமாகவும் எண்ணுகிறேன். என்னால் நூறு சதவீதம் உடல் தகுதியுடன் போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்றால் நான் அந்த போட்டியில் இருந்து விலகி விடுவேன்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் நான் வேறு ஒரு வீரரின் வாய்ப்பையும் தட்டிப் பறிப்பது போல் ஆகிவிடும்” என்று கூறியிருக்கிறார். ஆனால் இப்படி கூறிய மகேந்திர சிங் தோனி தற்போது காயத்துடன் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகிறார். அவர் நூறு சதவீதம் முழு உடல் தகுதியுடன் இல்லை. போட்டியின் போது அவர் ரன்கள் எடுக்க வேகமாக ஓட முடிவதில்லை.

இதையும் படிங்க:இவர்களுக்காகத்தான் குல்தீப் யாதவை பதுக்கி வைத்திருந்தோம்.. அதற்கு கை மேல் பலனும் கிடைத்தது.. வெற்றிக்கு பின்னர் பேசிய ரிஷப் பண்ட்

ஒரு வீரர் காயம் அடைந்து விட்டால் அவர் விலகுவது அணிக்கு சரியாக முடிவாக இருக்குமே தவிர தனிப்பட்ட முறையில் அவருக்கும், அணிக்கும் பாதிப்பையே ஏற்படுத்தும். இந்த நிலையில் மகேந்திர சிங் தோனிக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை அளிக்கப்படுகிறது தெரியவில்லை என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். விதி என்பது பாரபட்சம் இன்றி அனைவருக்கும் ஒன்றுதான். தோனி ரசிகர்கள் தோனியின் மாயையிலிருந்து வெளியே வந்து ஒரு நடுநிலையான ரசிக கண்ணோட்டத்தில் பார்த்தால் அவர் செய்வது தவறு என்பது புரியவரும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles